வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களிடையே பேசிய திரு. பியுஷ் கோயல், வாகனத் தொழிலுக்கு நிறைய வாய்ப்புகள் வரவிருப்பதாகத் தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
05 SEP 2020 6:33PM by PIB Chennai
கூட்டுறவு, கூட்டு முயற்சி மற்றும் உறுதியோடு உழைக்குமாறு நாட்டிலுள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ரயில்வே அமைச்சர் திரு பியுஷ் கோயல் வலியுறுத்தினார்.
வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) 60-வது வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய திரு கோயல், கடந்த சில வருடங்களில் இந்திய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் வளர்ச்சியடைந்திருப்பதாகவும், சர்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்தவர்களாக உருவெடுத்திருப்பதாகவும் கூறினார்.
இந்தியத் தொழில்துறை வருங்காலத்துக்கு தயார் நிலையில் இருப்பதாகவும், கோவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் பெரும் வெற்றியடையப் போவதாகவும் கூறிய அமைச்சர்,வாகனத் தொழிலுக்கு நிறைய வாய்ப்புகள் வரவிருப்பதாக தெரிவித்தார்.
"நெருக்கடி தான் நமது நிறுவனங்களிடம் இருந்து சிறப்பானவற்றை வெளிக்கொண்டு வரும். வர்த்தக ஊக்குவிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, தரம் உயர்த்துதல், தகவல் சேகரித்தல் மற்றும் பகிர்தல் ஆகியவற்றின் மூலம் முன்னணியில் இருந்து ACMA பணியாற்றலாம்," என்று திரு கோயல் கூறினார்..
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1651610
(रिलीज़ आईडी: 1651921)
आगंतुक पटल : 203