குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வாழ்வில் நான் அடைந்தவற்றுக்கும், செய்த சாதனைகளுக்கும் எனது ஆசிரியர்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 05 SEP 2020 4:06PM by PIB Chennai

தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தனக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத்து பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு, வாழ்வில் தான் அடைந்தவற்றுக்கும், செய்த சாதனைகளுக்கும் கடன்பட்டிருப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்ய நாயுடு என்று கூறினார்.

 

ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி, சொர்ண பாரத் அறக்கட்டளையால் நெல்லூரில் நடத்தப்பட்டுவரும் அக்ஷர வித்யாலயா பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடிய போது இதை அவர் கூறினார். நெல்லூர், விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சொர்ண பாரத் அறக்கட்டளையால் நடத்தப்பட்டுவரும் திறன் பயிற்சிகளின் ஆசிரியர்களுடனும் குடியரசுத் துணைத்தலைவர் காணொளிக் காட்சி மூலம் இன்று உரையாடினார்.

 

முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்திய திரு நாயுடு, திறமைமிகு ஆசிரியர், தத்துவ ஞானி, அறிவுஜீவி, அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

 

தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடன் கழித்ததாக கூறிய குடியரசுத் துணைத் தலைவர், தலைசிறந்த கல்விப் பணியை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டினார்.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651560
 



(Release ID: 1651625) Visitor Counter : 153