எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தித் திறன் சேவைகள் லிமிடட் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் இந்தியா நிறுவனங்களில் இருந்து 250 மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்ய உள்ளது

प्रविष्टि तिथि: 03 SEP 2020 5:27PM by PIB Chennai

இந்திய அரசின் மின்சாரத் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள  உயர் எரிசக்தி சேவை நிறுனமான எரிசக்தித் திறன் சேவைகள் லிமிடட் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் இந்தியா நிறுவனங்களில் இருந்து 250 மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்ய உள்ளது.

சமீபத்தில் ஆசியா வளர்ச்சி வங்கி வழங்கியிருந்த மான்யமான 5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை இந்தக் கொள்முதலுக்குப் பயன்படுத்தப்படும். உயர் முன்னுரிமைப் பகுதிகளான தேவை அடிப்படை எரிசக்தித் திறன் பிரிவுத் திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி வழங்கி மேம்படுத்தும் நோக்கில் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து எரிசக்தித் திறன் சேவைகள் லிமிடட் நிறுவனம் இந்த நிதி உதவியைப் பெற்றுள்ளது.


கொள்முதல் செய்யப்பட உள்ள இந்த மின்சார வாகனங்கள் மத்திய , மாநில அரசுகளிடம் தற்போது உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651057


(रिलीज़ आईडी: 1651279) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri