எரிசக்தி அமைச்சகம்

AIMA-சாணக்யா தேசிய நிர்வாக விளையாட்டு போட்டிகள் 2020-இல் 112 நிறுவனங்களை முந்தி NTPC வெற்றி பெற்றது, தமிழ்நாடு அணி சாதனை

Posted On: 03 SEP 2020 3:47PM by PIB Chennai

சமீபத்தில் நிறைவடைந்த அனைத்திந்திய மேலாண்மை சங்கம் (AIMA) - சாணக்யா (தொழில் ஊக்க விளையாட்டு) தேசிய நிர்வாக விளையாட்டு போட்டிகள் 2020-இல் கடும் சவால்களை எதிர்கொண்டு தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) வெற்றி பெற்றது

 

பெருமைக்குரிய தேசிய நிர்வாக விளையாட்டு போட்டிகளில் கடந்த ஐந்து வருடங்களில் முதல் முறையாக NTPC வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனம், தமிழ்நாட்டின் வல்லூரில் உள்ள அதன் மின் நிலையத்தின் அணி இந்த வெற்றியை பெற்றதாக செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.

 

திரு ஜி சின்னத்தம்பி, மேலாளர், வர்த்தகம் & தொழில் பராமரிப்பு; திரு பி ஜெ செங்குட்டுவன், மேலாளர், செயல்பாடுகள் (பிரதான அலகு); திரு ஜெ யோகேந்திரகுமார், நிர்வாகம், செயல்பாடு ஆகியோரை உள்ளடக்கிய அணி இந்த வெற்றியை பெற்றது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650986

***
 


(Release ID: 1651063) Visitor Counter : 257