அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்முனைவோர் இருப்பிடத்தை சித்தரிக்கும் என்ஐடிஎச்ஐ-இஐஆர் சிற்றேடு தொடங்கப்பட்டது
Posted On:
02 SEP 2020 5:55PM by PIB Chennai
புதுமைகளை மேம்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடுடன் பயன்படுத்துதல் குறித்த தேசிய செயல் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் இருப்பிடத்தை (இ’ஐ’ஆர்’) சித்தரிக்கும் \சிற்றேடு ஒன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் திரு.அசுதோஷ் சர்மா என்ஐடிஎச்ஐ-இஐஆர் குடும்பத்தினரின் தேசிய ஒருங்கிணைப்பு விழாவில் தொடங்கி வைத்தார்.
"என்ஐடிஎச்ஐ-இஐஆர் திட்டம், கூட்டுறவு செயல்முறைகளை புதுமையாக மாற்றியமைப்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும், இது பயனுள்ளதை சாத்தியமாக்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் . பேராசிரியர் திரு. அசுதோஷ் சர்மா, தெரிவித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் என்ஐடிஎச்ஐ- தொழில் முனைவோர் இருப்பிட (இஐஆர்) திட்டத்தின் தேசிய அமலாக்க பங்குதாரரான செயலாக்க மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார். . .
என்எஸ்டிஇடிபி அமைப்பின் தலைவர் டாக்டர் அனிதா குப்தா, பேசுகையில் என்ஐடிஎச்ஐ-இஐஆர் திட்டத்தின் வெற்றியை விரிவாக எடுத்துரைத்தார், இஐஆர் திட்டத்தின் இரண்டு பதிப்புகள் பெரும் தாக்கங்களை வெளிப்படுத்தி இருப்பதாகவும் , இதன் விளைவாக 65 சதவிகிதம் தொடக்க நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650688
*****
(Release ID: 1651036)
Visitor Counter : 172