ஜல்சக்தி அமைச்சகம்
நீர்வள மாவீரர்கள் போட்டி 2.0
Posted On:
02 SEP 2020 6:13PM by PIB Chennai
“நீர்வள மாவீரர்கள் - உங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் நீர்வளத்துறை அமைச்சகம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் போட்டி ஒன்றைத் தொடங்கியுள்ளது .நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த முக்கிய அம்சம் மக்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வள மாவீரர்கள் போட்டியின் மூலம், இந்தியா முழுவதிலும் இருந்து நீர்வளப் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்து, அவற்றை சேகரிப்போம் என்று நாம் நம்புகிறோம். விருதுகள் வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் (செப்டம்பர், 2020 முதல்) உள்ளீடுகள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 10 உள்ளீடுகள் விருதுகளுக்காகப் பரிசீலிக்கப்படும் . தேர்வுசெய்யப்பட்ட அனைத்து உள்ளீடுகளுக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ. 10,000 மற்றும் ஒரு சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்பதற்கு, பங்கேற்பாளர்கள் தங்களது, நீர் சேமிப்பு மற்றும் நீர் வளங்களை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கான முயற்சிகளை சித்தரிக்கும்,1-5 நிமிடங்கள் வரையிலான சிறப்பாக தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சி மூலம் (300 சொற்கள் கொண்ட விளக்கவுரை மற்றும் சில புகைப்படங்கள் / படங்களுடன்) நீர்வளப் பாதுகாப்பு குறித்த வெற்றி கதைகளைப் பதிவிட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் தங்கள் வீடியோக்களை (அவர்களது YouTube வீடியோவின் இணைப்புடன்) MyGov போர்ட்டலில் (www.mygov.in) பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650695 என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.
*******
(Release ID: 1651017)
Visitor Counter : 186