நிதி அமைச்சகம்
வணிக வங்கிகளுக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதில் இணக்க சோதனை செயல்பாட்டை மத்திய நேரடி வரிகள் வாரியம் சிபிடிடி வழங்குகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2020 7:06PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் வாரியம், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான இணக்க சோதனை புதிய செயல்பாட்டை தற்போது வெளியிட்டுள்ளது. வணிக வங்கிகளிடம் இது கிடைக்கும். அதிக அளவில் வருமான வரி தாக்கல் செய்யும் போது, பான் கார்டு மூலம் அதன் நிலவரம் குறித்து அறிந்து கொள்ளலாம். வணிக வங்கிகளுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்த வடிவம் மற்றும் நடைமுறைகளை வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் (சிஸ்டம்ஸ்) அறிவித்துள்ளார். செயல்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு;
- ‘’ ஐடிஆர் இணக்க சோதனை தாக்கலை அணுகுதல்
- பான் மூலம் வேண்டுகோளை (இன்புட்) தயாரித்தல்
- இன்புட் சிஎஸ்வி கோப்பை பதிவேற்றுதல்
- அவுட்புட் சிஎஸ்வி கோப்பை பதிவிறக்குதல்
மேலும் கூடுதல் விவரங்களுக்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும் : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650735
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1651009)
வருகையாளர் எண்ணிக்கை : 191