சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரஹலாத் சிங் படேல் இன்று, மலை ஏற்றம் மற்றும் சாகசச் செயல்கள் சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனங்களிடையே ஆய்வு மேற்கொண்டார்

प्रविष्टि तिथि: 02 SEP 2020 5:40PM by PIB Chennai

மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரஹலாத் சிங் படேல் இன்று (02.09.2020) புது டில்லியில் , மலை ஏற்றம் மற்றும் சாகசச் செயல்கள் சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனங்களிடையே ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் சுற்றுலா அமைச்சர், இந்தியாவில் சாகசச் செயல்
சுற்றுலாவை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கூட்டத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் அனைத்தும் தாங்கள் நடத்தி வரும் சாகசச் செயல் சுற்றுலா சார்ந்த வகுப்புகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியற்றுடன் எதிர்காலத்துக்கு உகந்த செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தன.


பங்கேற்ற அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்குப் பிறகு திரு படேல், இந்த நிறுவனங்களின் திறன் மட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த சுற்றுலா அமைச்சகம் முழு ஆதரவு வழங்கும் என்று உறுதி அளித்தார்.

மேலும் விவங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650673 என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
                                                                    -----


(रिलीज़ आईडी: 1651006) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi