ஜல்சக்தி அமைச்சகம்

தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2020 3:59PM by PIB Chennai

தெற்கு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே அதிகம் முதல் மிக அதிக மழைக்கு செப்டமர் 2 மற்றும் 3, 2020 ஆகிய தினங்களில் வாய்ப்புள்ளது.

காவிரி பேசினில் உள்ள நீர்த்தேக்கங்களில் அதிக நீர்வரத்து எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையான நீர்த்தேக்கங்களில் ஏற்கனவே 90 சதவீதத்துக்கும் அதிகமான நீரிருப்பு உள்ளதால், அதிக மழையினால் அதிகளவில் நீர்வரத்து ஏற்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து மாநிலங்களிலும் அடுத்த 3-4 நாட்களுக்கு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விதிகளின் படியும், நிலையான செயல்பாட்டு முறையை பின்பற்றியும் இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும்.

விபத்து எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், போக்குவரத்தை சீராக்கவும், இந்த ஆறுகள் மீது கட்டப்பட்டுள்ள  சாலைகள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் சிறப்பான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650355 


(வெளியீட்டு அடையாள எண்: 1650505) வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri