பாதுகாப்பு அமைச்சகம்

திரு.பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இரங்கல்

Posted On: 31 AUG 2020 8:18PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில் `திரு பிரணாப் முகர்ஜி, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவரது மறைவு தனிப்பட்ட இழப்பாகும். இந்திய வரலாறு, அயலுறவுகள், பொதுக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அவரது ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். எளிமை, நேர்மை மற்றும் வலிமையான பண்புகளின் வடிவமாக இருந்தார். நமது நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்தார். பொது வாழ்க்கையில் அவரின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.  அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, பாதுகாப்பு அமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

*****

 (Release ID: 1650345) Visitor Counter : 103