பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

'தேசிய ஆள்சேர்ப்பு முகமை'யைக் குறித்த அரசின் முடிவு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குப் பணிகளைக் கொண்டு வரும் வேலைவாய்ப்புத் துறையின் மிகப்பெரிய மாற்றமாகும் என்று டாக்டர்.ஜிதேந்திரசிங்கூறுகிறார்

Posted On: 31 AUG 2020 3:33PM by PIB Chennai

தேசிய ஆள்சேர்ப்பு முகமையைப் பற்றி பத்திரிகை தகவல் அலுவலகம், கொல்கத்தா, இன்று ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் பேசிய நிபுணர்கள், வேலைவாய்ப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை தேசிய ஆள்சேர்ப்பு முகமை கொண்டு வரும் என்றும், சரியான வேலையைப் பெறும் இளைஞர்களின் லட்சியத்தை அடைய உதவும் என்றும் கூறினர். ஆள்சேர்ப்புத் துறை மற்றும் கொள்கை ரீதியான பார்வைகளில் இருந்து தேசிய ஆள்சேர்ப்பு முகமையின் சாத்தியக்கூறுகள் குறித்து தொழில் மற்றும் அரசுத் துறையினர் கல்வி வல்லுநர்களோடு உரையாடி ஆலோசித்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை
அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர்.ஜிதேந்திர சிங், அரசின் முடிவு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குப் பணிகளைக் கொண்டு வரும் வேலைவாய்ப்புத் துறையின் மிகப்பெரிய மாற்றமாகும் என்று கூறினார். விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்கப் போகும் வேலைவாய்ப்புகள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சி என்றும், இளைஞர்களின் வாழ்வை எளிதாக்குவதில் இது மிகவும் உதவும் என்றும் அவர் கூறினார். ஆள்சேர்ப்புத் துறையில் சிறப்பான மாணவர் சேர்க்கைச் செயல்முறையும், நல்ல பழக்கங்களும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வேலைவாய்ப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை தேசிய ஆள்சேர்ப்பு முகமை கொண்டு வரும் என்றும் சரியான வேலையைப் பெறும் இளைஞர்களின் லட்சியத்தை அடைய அது உதவும் என்றும் டாக்டர். ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். இது வெறும் ஆளுகை ரீதியிலான சீர்திருத்தம் அல்ல, சமூக-பொருளாதார சீர்திருத்தமும் கூட என்று அவர் கூறினார்.


 


(Release ID: 1650051) Visitor Counter : 295