விவசாயத்துறை அமைச்சகம்

ஜான்சியில் உள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை காணொளிக்காட்சி மூலம் பிரதமர் திறந்துவைத்தார்

Posted On: 29 AUG 2020 8:24PM by PIB Chennai

உத்திரப்பிரதேசம் ஜான்சியில் உள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்
பல்கலைக்கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை பிரதமர் திரு
நரேந்திர மோடி இன்று (29.8.20) காணொளிக்காட்சி  காட்சி மூலம்
திறந்து வைத்தார். இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடையே அவர்
கலந்துரையாடினார்.

சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் பாராட்டிய பிரதமர், இந்தப்
பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள், நாட்டின்
வேளாண் துறைக்குத் தீவிரப் பங்களிப்பார்கள் என்று நம்புவதாகக்
குறிப்பிட்டார். புதிய கட்டிடங்களில் வழங்கப்படும் வசதிகள் மாணவர்களின்
மன ஊக்கத்தை அதிகரித்து அவர்களிடையே மேலும் கடுமையாக உழைக்க ஆர்வத்தை
ஏற்படுத்தும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
பிரதமரின் முழுமையான உரைக்கு கீழ்க்கண்ட வலைத்தலத்தினைப் பார்க்கவும்:
 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1649484#.X0pe3jAecEg.gmail

முன்னதாக வரவேற்பு உரை ஆற்றிய மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திரசிங் தோமர், அனைவருடன் இணைந்து அனைவருக்கும் மேம்பாடு என்ற மந்திரத்துடன் இணைந்து, 2014க்குப் பின், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ்
மேற்கொள்ளப்பட்டுள்ள  முயற்சிகள் தற்போது நல்ல விளைவுகளை ஏற்படுத்தத்
தொடங்கியுள்ளதாகக் கூறினார். ராணி லட்சுமி பாய் பல்கலைக் கழகம்  தொடர்பான பணிகள் 2014இல் தொடங்கின. தற்போது இதில் 3 இணைக்கப்பட்ட கல்லூரிகள் உள்ளன
 22 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவற்றில் பயின்று வருகின்றனர்.

 



(Release ID: 1649768) Visitor Counter : 117