உள்துறை அமைச்சகம்
யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்பநலத் துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர்
Posted On:
29 AUG 2020 8:17PM by PIB Chennai
யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லக்ஷதீப், அந்தமான் & நிகோபார், தாதர்& நாகர் ஹவேலி, டாமன் & டியூ ஆகியவற்றில் கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதன் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து 29.08.2020 அன்று காணொளிக் காட்சி மூலம் மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்பநலத் துறைச் செயலாளரும் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது
மத்திய உள்துறை மற்றும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகங்களின்
உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகள் கோவிட்-19 சோதனைகள், கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவர்களைத் தனிமைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள், மருத்துவ அடிப்படை வசதி
மற்றும் பணியாளர்கள், இணைமருத்துவப் பணியாளர்கள் நிலவரம் போன்றவை குறித்து சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தனர்.
நிர்வாக அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், இணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் கோவிட்-19 கட்டுப்பாடு மற்றும் அது சார்ந்த பணி நிலவர
நிர்வாகத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்பநலத் துறைச் செயலாளரும் இந்த
யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
(Release ID: 1649765)
Visitor Counter : 195