நிதி அமைச்சகம்
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒத்துழைப்புடன் பொருளாதார விவகாரத்துறை நீடித்த நிதி ஒத்துழைப்பு ஆலோசனை தொடக்கம்
Posted On:
28 AUG 2020 10:45PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின், பொருளாதார விவகாரத்துறை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் யுஎன்டிபி-யின் ஒத்துழைப்புடன் நீடித்த நிதி ஒத்துழைப்பு ஆலோசனையை ஆகஸ்ட் 26-ஆம்தேதி தொடங்கியது. இந்த ஆலோசனை மெய்நிகர் தளத்தில் 26, 27, 28 ஆகிய நாட்களில் நடைபெற்றது. நீடித்த நிதியின் சில முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் நீடித்த நிதிக் கட்டமைப்புக்கான விரிவான வாய்ப்பை மையப்படுத்தி விவாதங்கள் நடைபெற்றன. முதலீட்டுத் தாக்கம், கலப்பு நிதி உபகரணங்களின் பங்கு, நீடித்த வளர்ச்சிக்கு பசுமை நிதி உபகரணங்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நீடித்த நடவடிக்கைகளின் வகைபிரிப்பு தேவை, நிலைத்தன்மை தொடர்பான பெரு நிறுவனங்களின் அறிவிப்புகள் போன்ற புதுமையான, புதிய நிதியை ஏற்படுத்துவதற்கு உள்ள தடுப்புகளைக் களைதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும். பருவநிலை மாற்றம், இதர சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் அபாயங்களை சமாளிக்கும் வகையில் நிதித்துறையை தயார்படுத்துவது பற்றியும் இதில் விவாதிக்கப்பட்டது.
இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் பிரதிநிதிகள், இந்திய நிதித்துறை ஒழுங்குமுறை, பன்னோக்கு வளர்ச்சி வங்கிகள், இருதரப்பு கூட்டாண்மை முகமைகள், சங்கங்கள், சிவில் சொசைட்டி அமைப்புகள், கல்வித் துறைப் பிரதிநிதிகள் என சுமார் 220 பேர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
மதிப்புமிக்க நுண்ணறிவு, உறுதியான பரிந்துரைகளை கூட்டு ஒத்துழைப்பு வழங்குகிறது. இது, இந்தியாவுக்கான நீடித்த நிதி கட்டமைப்பு/ வழிமுறையை உருவாக்க உதவும்.
****
(Release ID: 1649509)