மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி (ஜே.என்.எம்.சி) தேர்வு மையத்தை மத்திய கல்வி அமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்
Posted On:
27 AUG 2020 9:03PM by PIB Chennai
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் (ஜே.என்.எம்.சி) தேர்வு மையத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'காணொலி காட்சி தளம் மூலம் திறந்துவைத்தார் . இரண்டு கோடி ரூபாய் அரசு மானியத்தில் இந்தத் தேர்வு மையம் கட்டப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், உலகம் முழுவதும் குறிப்பாக கல்வி மற்றும் கற்றல் துறைகளில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கோவிட்-19 நோய் தொற்றின் இடையூறை எதிர்கொண்டுள்ளது; இந்நிலையில் நமது கற்றல் மையங்களும் மற்றும் மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்
சுதந்திரப் போராட்டத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (ஏஎம்யூ) ஒரு முக்கிய பங்காற்றியிருப்பதைக் குறிப்பிட்ட திரு.பொக்ரியால், இன்றும் அந்த பல்கலைக்கழகம்.தேசபக்தியின் வலுவான உணர்வை எதிரொலிக்கிறது என்றார். அதன் சிறப்பான கல்வி போதனை, அதற்கு விலைமதிப்பற்ற தேசிய சொத்தை உருவாக்கி உள்ளது. கோவிட் 19 நோய் தொற்று பரவலால் நாடு பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அதன் மருத்துவக் கல்லூரி ஒரு புதிய நம்பிக்கையின் சைகையை வெளிப்படுத்துகிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், தொடர்ச்சியான சாதகமான மாற்றத்துடன் அனைத்து வகையிலும் வளர்ச்சியை உறுதி செய்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மத்திய அமைச்சர் பாராட்டினார்.
**** *
(Release ID: 1649191)
Visitor Counter : 209