ஜல்சக்தி அமைச்சகம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் கோவா முதலமைச்சர் இருவரும் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டாக இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டத்தை நடத்தினர்
Posted On:
27 AUG 2020 7:45PM by PIB Chennai
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கோவா முதல்வர் திரு. பிரமோத் சாவந்த் உடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஜல் ஜீவன் இயக்கத்தை மாநிலத்தில் செயல்படுத்தப்படுவது குறித்து விவாதித்தார். நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீரை வழங்கும் இலக்குடன், மாநிலங்களுடன் இணைந்து, ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் முழுமையான செயல்பாடு, அதாவது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீடுகளில் குழாய் நீர் இணைப்பு பெறுவதாகும்.
2020-21 க்குள் அனைத்து வீடுகளுக்கும் 100% குழாய் இணைப்புகளை வழங்க கோவா திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 2.6 லட்சம் வீடுகளில், 2.29 லட்சம் வீடுகளில் வீட்டு குழாய் இணைப்பு உள்ளது. 2019-20 ஆம் ஆண்டில், மாநிலத்தால் 1025 வீட்டு குழாய் இணைப்புகளை மட்டுமே வழங்க முடிந்தது. 2020-21 ஆம் ஆண்டில், இதுவரை 4,500 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
**********
(Release ID: 1649169)
Visitor Counter : 144