விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அண்மைக்கால வேளாண் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை உள்கட்டமைப்பு வசதி நிதியத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்து முதலமைச்சர்கள் மற்றும் மாநில வேளாண்மை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்

Posted On: 27 AUG 2020 5:54PM by PIB Chennai

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று அண்மைக்கால வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண்மை உள்கட்டமைப்பு வசதி நிதியத்தின் கீழ் நிதி உதவி அளிக்கும்   மத்திய அரசின் புதிய திட்டம் ஆகியன குறித்து முதலமைச்சர்கள் மற்றும் மாநில வேளாண்மை அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.  இதில் உத்திரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்தியநாத், மஹாராஷ்டிரா முதல்வர் திரு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களின் வேளாண்மை அமைச்சர்கள் மற்றும் மத்திய வேளாண் இணையமைச்சர்கள் திரு புருஷோத்தம் ரூபாலா, திரு கைலாஷ் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவாதங்களின் போது திரு தோமர், இந்த நிதியத்தின் மூலமான நடவடிக்கைகள், அறுவடைக்குப் பின்பான நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், சமூக விவசாய சொத்துக்கள் கிடைப்பதை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்த நிதியத்தின் கீழ் முழுப் பலன்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  ரூ.1லட்சம் கோடி நிதியைப் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் அனைத்து கிராமங்களிலும் புதியதாக உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர்களும் மாநில வேளாண் அமைச்சர்களும் முழு உத்தரவாதம் அளித்து உள்ளனர்.  

மாண்புமிகு பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அரசானது இந்திய விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் நீடித்த நிலையான வாழ்வாதாரங்களை உறுதி செய்வதில் பொறுப்புடைமையுடன் செயல்படுகிறது என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.  அரசு இயற்றியுள்ள புதிய சட்டங்கள் விவசாயிகள் நல்வாழ்வு தொடர்பானதாக உள்ளன.  இவை அரசு எடுத்து வரும் விவசாயிகளை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியில், அண்மைக்கால நடவடிக்கைகளாக உள்ளன.

-----


(Release ID: 1649164) Visitor Counter : 197