உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உடான் 4.0 திட்டத்தில் 78 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி
Posted On:
27 AUG 2020 2:41PM by PIB Chennai
உடான் என்ற பிராந்திய இணைப்புத் திட்டத்தின் 4வது கட்டத்தில் 78 புதிய வழித்தடங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மூன்று சுற்று தேர்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்த ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படுத்தப்படும். புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்கியதில், வடகிழக்குப் பிராந்தியம், மலைப் பகுதிகள் நிறைந்த மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.
வடகிழக்குப் பிராந்தியத்தில் குவாஹாத்தியில் இருந்து டேஜு, ருப்சி, தேஜ்பூர், பாஸ்ஸிகாட், மிஸா, ஷில்லாங் வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஹிஸ்ஸாரில் இருந்து சண்டீகர், டேராடூன் மற்றும் தர்மசாலாவுக்கு உடான் சேவை மூலம் பயணிக்க முடியும். வாரணாசியில் இருந்து சித்ரகூடம், ஷ்ரவாஸ்டி ஆகிய இடங்களுக்கான வழித்தடங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. உடான் 4.0 புதிய வழித்தடங்கள் மூலமாக அகாட்டி, கவராட்டி, மினிகாய் தீவுகளுக்கும் போக்குவரத்து இணைப்பு வசதி கிடைக்கும்.
இதுவரையில் உடான் சிறிய ரக விமான சேவையில் 766 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள 29, சேவை இல்லாத இடங்களுக்கு 08 (2 ஹெலிகாப்டர்கள், 1 நீர்நிலை மீதான விமானதளம்), குறைந்த அளவில் சேவை நடைபெறும் விமான நிலையங்களுக்கு 2 என்ற அளவில் புதிய அனுமதிகள் தரப்பட்டுள்ளன.
------
(Release ID: 1648969)
Visitor Counter : 275
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam