ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தின் கீழ் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான நீர் பாதுகாப்புக் கட்டமைப்புகளும், 2.63 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளும் அடங்கும்
प्रविष्टि तिथि:
26 AUG 2020 3:49PM by PIB Chennai
கரீப் கல்யாண ரோஜ்கர் திட்டத்தின் கீழ் (G K R A) ஒன்பதாவது வாரத்துக்குள் சுமார் 24 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்காக இதுவரை 18862 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பல கட்டமைப்புகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. 85786 நீர்ப் பாதுகாப்புக் கட்டமைப்புகள், 263846 கிராமப்புற வீடுகள், 19397 கால்நடைக் கொட்டகைகள், 12798 பண்ணைக் குட்டைகள், 4260 சமுதாய சுத்திகரிப்பு வளாகங்கள் உட்பட பல அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. 6342 பணிகள் மாவட்ட கனிம நிதியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1002 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இணையதளத் தொடர்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு நீர்க்கழிவு மேலாண்மை தொடர்பான 13022 பணிகள் நடைபெற்று வருகின்றன. 31658 பேருக்கு கிருஷி விஞ்ஞான் கேந்திரா மூலமாக திறன் பயிற்சி அளிக்கப்பட்டது .
12 அமைச்சகங்கள்/ துறைகள், மாநில அரசுகள் ஆகியவை இணைந்து செயல்படுவதால், இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் கிராமப்புற சமூகத்தினருக்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது.
****
(रिलीज़ आईडी: 1648890)
आगंतुक पटल : 270
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam