அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான விவசாய எந்திரங்களில் இறக்குமதி உதிரி பாகங்களை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மதிப்பீடு குறித்த வெபினார்

Posted On: 25 AUG 2020 6:48PM by PIB Chennai

விவசாய எந்திரங்களுக்கு இறக்குமதி செய்யப்படும்  உதிரி பாகங்களை உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மதிப்பீடு குறித்த இணையவழிக் கருத்தரங்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்றதுஅறிவியல் தொழிலக ஆராய்ச்சிக்குழுமம் மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Council of Scientific & Industrial Research - Central Mechanical Engineering Research Institute - CSIR-CMERI) துர்காபூர் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்ஹரீஷ் ஹிரானி; லூதியானா குறு, சிறு, நடுத்தரத்தொழில் வளர்ச்சி நிறுவனத்தின்  (MSME DEVELOPMENT INSTITUTE  - MSME-DI) துணை இயக்குநர் திரு. ஆர்.கே.பார்மர், பஞ்சாப் மாநில விவசாய செயல்பாட்டு தலைவர் திரு. பல்தேவ் சிங் ஆகியோர் இதுபற்றிய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ ,துர்காபூர் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்ஹரீஷ் ஹிரானி, சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கிய விவசாய எந்திரமயமாக்கல், விவசாயம் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான, பகுப்பாய்வு விளக்கத்தை அளித்தார். அறிவியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகியவற்றின் கூட்டுறவு, நாட்டின் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்கும் அற்பதங்களை நிகழ்த்தும் என டாக்டர். ஹிரானி கூறினார்.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது, அவர்களது விளைபொருளுக்கு முறையான மதிப்பைப் பெறுவது ஆகியவற்றுக்காக, சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ , அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. மிஜோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்டபல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் இது நிறுவப்பட்டுள்ளது.

டிராக்டர் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக, சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ, முதல் தலைமுறை -டிராக்டரை 2020 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது என டாக்டர் ஹரீஷ் ஹிரானி தெரிவித்தார். இது நாடு முழுவதும் தற்போது வழக்கத்தில் உள்ள டீசல் டிராக்டர்களின் பயன்பாட்டை மாற்றியமைக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கும்.



(Release ID: 1648602) Visitor Counter : 161