குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தேன் இயக்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுய வேலைவாய்ப்பை தருகிறது; மேற்கு உத்திரப்பிரதேசத்தில் 700 தேனீ பெட்டிகள் விநியோகிக்கப்படுகின்றன

Posted On: 25 AUG 2020 4:01PM by PIB Chennai

காதி கிராமத் தொழில் ஆணையம் (KVIC) தனது முதன்மை “தேன் இயக்கம்” திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் “சுயசார்பு பாரத்தை” நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை முன்னெடுத்துள்ளது. குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் மாநில அமைச்சர் திரு. பிரதாப் சந்திர சாரங்கி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மற்றும் புலந்த்ஷர் மாவட்டங்களைச் சேர்ந்த 70 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 700 தேனீ பெட்டிகளை இன்று விநியோகித்தார், இதனால் அவர்களுக்குத் தேன் இயக்கத்தின் கீழ் வாழ்வாதார வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - சஹரன்பூரிலிருந்து 40 பேரும், புலந்த்ஷாரில் இருந்து 30 பேரும் - கோவிட் -19 ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியை எதிர்கொண்டு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தனர். பிரதமரின்  “சுயசார்பு பாரத்” க்கான பிரதமரின் அழைப்பிற்கு பங்களிக்கும் வகையில், காதி கிராமத் தொழில் ஆணையம் (KVIC) இந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேனீ வளர்ப்பில் 5 நாள் பயிற்சி அளித்து, தேனீ வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்குத் தேவையான கருவிகள் மற்றும் தேனீ பெட்டிகளையும் வழங்கியது. பல்வேறு வகை தாவரங்கள் மற்றும் ஏராளமான பயிர்களை உள்ளடக்கிய முழு மேற்கு உத்தரப்பிரதேசமும் தேன் உற்பத்திக்கு ஏற்றது.

*********



(Release ID: 1648525) Visitor Counter : 149