பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2020-ம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கான பிரதமரின் விருதுகள்

Posted On: 25 AUG 2020 2:59PM by PIB Chennai

மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், பொது நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கான பிரதமரின் விருதுகள் 2020 அக்டோபர் 31-ஆம்தேதி தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தின் கெவாடியாவில் அமைந்துள்ள ஒருமைப்பாட்டு சிலை வளாகத்தில் பிரதமரால் வழங்கப்படவுள்ளன.

2020 –ஆம் ஆண்டில், பொதுநிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கான பிரதமரின் விருதுகளுக்கு, குடிமைப்பணியில் சிறந்த சேவைக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலான திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, பின்வருமாறு வலுப்படுத்தப்பட்டுள்ளது;

i.          முன்னுரிமைப் பிரிவில் கடன் வழங்குதல் மூலம் உள்ளார்ந்த மேம்பாடு

ii.         மக்கள் இயக்கங்களைப் பிரபலப்படுத்துதல்- மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் (நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதி) மூலம்ஜன் பாகிதாரி’’

iii.       சேவை வழங்கலை முன்னேற்றுதல், பொதுமக்கள் குறைதீர்வு

மாவட்டங்களில் பல்வேறு துறைகளில், ஒட்டுமொத்தப் பலன்கள் அடிப்படையிலான பகுதிகளை அடையாளம் கண்டு, விருதுகளுக்கான  வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. முன்னுரிமைப் பிரிவில் கடன் வழங்குதல் மூலம் உள்ளார்ந்த மேம்பாட்டு செயல்பாட்டுக்கான மாவட்ட ஆட்சியர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படும். இதில், “ஜன் பாகிதாரி’’ மூலம் மக்கள் இயக்கங்களைப் பிரபலப்படுத்துதல், சேவை வழங்கலை முன்னேற்றுதல், பொதுமக்கள் குறைதீர்வு ஆகியவை அடங்கும்.

மேலும், கங்கைப் புத்தாக்கத் திட்டத்தில், மாவட்ட அளவிலான அதிகாரிகளின் முயற்சிகளும் பிரதமரின் இந்த விருதுகளுக்கு அங்கீகரிக்கப்படும்

பின்தங்கிய மாவட்டங்களுக்கான விருது திட்டமும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு கால செயல்பாட்டைப் பின்பற்றி, ஒட்டுமொத்த முன்னேற்றம் அடைந்த மாவட்டத்துக்கு விருது வழங்கப்படும்.

புதுமைப் பிரிவுக்கு வழக்கமாக அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தேசிய/மாநில/மாவட்ட  அளவில் மூன்று பிரிவுகளில் , விரிவான அடிப்படையில், புதுமையான கண்டுபிடிப்புகள், நடைமுறைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

*****(Release ID: 1648518) Visitor Counter : 194