சுற்றுலா அமைச்சகம்
ஊரடங்குக்குப் பிறகு ஹோட்டல்கள் திறக்கப்பட்ட முதல் நாளில், ஆயத்த நிலையை ஆய்வு செய்வதற்காக ஹோட்டல் அசோக்குக்கு, மத்திய சுற்றுலா அமைச்சர் வருகை
प्रविष्टि तिथि:
25 AUG 2020 12:42PM by PIB Chennai
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டி.டி.எம்.ஏ) ஹோட்டல்களை திறக்க ஆகஸ்ட் 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, ஆயத்த ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் (ஐ.டி.டி.சி) நடத்தும் ஹோட்டல் அசோக்குக்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திரு.பிரகலாத் சிங் பட்டேல் வருகை தந்தார். மாநில தலைநகரில் தங்களது ஹோட்டல்களை 2020 ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் மீண்டும் திறப்பதாக இந்திய சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் (ஐ.டி.டி.சி) அறிவித்திருந்தது.
ஹோட்டல்களை மீண்டும் திறப்பது குறித்து பேசிய அமைச்சர், “நாட்டின் தலைநகரில், சுற்றுலா தொழில்துறையின் இரண்டு பெரிய பிரிவுகளான அதாவது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை திறப்பது சாதகமான முடிவு. இந்த நடவடிக்கை உள்நாட்டு சுற்றுலா தொழில்துறையை ஊக்குவிக்க உதவுவதுடன் இந்தj; தொழிலில் உள்ளவர்களுக்கு போதுமான அளவில் நிவாரணத்தையும் அளிக்கும். டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (டி.டி.எம்.ஏ) முடிவு, தலைநகரில் சுற்றுலாத்துறைக்கும், விருந்தோம்பல் செயல்பாடுகளுக்கும், புத்துயிர் அளிக்கும் வரவேற்கத்தகுந்த நடவடிக்கையாகும்”, என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் உரையாடிய அமைச்சர் திரு.பட்டேல், ஐ.டி.டி.சி தனது ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட்-19 நோய் தொற்று தொடர்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கடுமையான பயிற்சியை வழங்கியுள்ளது என்றும், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு விரிவான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி\ உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார் . மேலும், “கோவிட்-19 நிலைமை குறித்து நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கவும், தேவைப்படும்போது அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் (ஏ.ஐ.எம்எஸ்) ஐடிடிசி ;ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.” என்றும் திரு.பட்டேல் கூறினார்.
-----
(रिलीज़ आईडी: 1648503)
आगंतुक पटल : 271