பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய பாதுகாப்புp படையின் 51-வது சிறப்புch செயல்குழுவுக்கு சிஓஏஎஸ்யூனிட் அப்ரிசியேசன் விருதை ராணுவth தலைமைth தளபதி வழங்கினார்

Posted On: 24 AUG 2020 6:24PM by PIB Chennai

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த்நரவானே இன்று தேசியப் பாதுகாப்புப்படையின் 51-வது சிறப்புச் செயல்குழுவுக்கு சிஓஏஎஸ் யூனிட் அப்ரிசியேசன் விருதை வழங்கினார். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியதைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராணுவத் தலைமைத் தளபதி இந்தக்குழுவின் திறமை மற்றும் தீரத்தைப் பாராட்டினார். இந்திய ராணுவத்தின்  100 சதவீத வீரர்கள் அடங்கிய இக்குழு, தீவிரவாதத்தை முறியடிப்பதில் மகத்தான சாதனை படைத்தது. இதற்காக, மூன்று அசோக சக்ரா பதக்கங்கள் உள்பட தீரச்செயலுக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இக்குழுவின் பல்வேறு நடவடிக்கைகளில், குறிப்பிடத்தக்கது ஓபிபிளாக்டோரண்டோ ஆகும். 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது, எட்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்று, ஏராளமான வெளிநாட்டவர் உள்பட 600-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை இக்குழு விடுவித்தது. 51-வது சிறப்புச் செயல்குழு அமைக்கப்பட்ட 1984 டிசம்பர் முதல், உலகின் மிகவும் புகழ்பெற்ற தீவிரவாதத் தடுப்பு அமைப்பாகச் செயல்பட்டு தனக்கென முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

 

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/2TCVX.jpeg

 

கர்னல்அமன்ஆனந்த்

மக்கள் தொடர்பு அதிகாரி (ராணுவம்)



(Release ID: 1648338) Visitor Counter : 140