பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்கை நாகாலாந்து ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி சந்தித்தார்

Posted On: 24 AUG 2020 6:24PM by PIB Chennai

வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்  நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம் அணுசக்தி, விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங்கை இன்று, நாகாலாந்து ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி புதுதில்லியில் சந்தித்து மாநிலத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து விவாதித்தார்.

2014-ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்ற உடன், நாட்டின் இதர வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு இணையாக வடகிழக்குப் பிராந்தியத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர்  கூறியதை டாக்டர். ஜித்தேந்திர சிங் சுட்டிக்காட்டினார். கடந்த ஆறு ஆண்டுகளில், வளர்ச்சி இடைவெளிகள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டதுடன், வட கிழக்குப் பிராந்தியம் உளவியல் ரீதியிலும் நம்பிக்கையை பெற்றுள்ளதாக அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், செல்வதற்கு சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் தயாராக உள்ளதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

><><><><>

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001DUBJ.jpg


(Release ID: 1648287) Visitor Counter : 151