மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சர் இன்று புதுதில்லியில் தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனத்தின் நடவடிக்கையை மீளாய்வு செய்தார்

Posted On: 24 AUG 2020 5:24PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று புதுதில்லியில் தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனத்தின் (NIOS) நடவடிக்கையை மீளாய்வு செய்தார்.

இந்த மீளாய்வுக் கூட்டத்தின் போது திரு.பொக்ரியால் சிறப்பான பலன்களை  வழங்கும் வகையில் இந்த நிறுவனம் வெளிப்படையாகப் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு தேர்வு முறையை வலுப்படுத்துவது குறித்தும் அமைச்சர் விவாதித்தார்.

 

என்ஐஓஎஸ் தனது மாணவர்களுக்கு வழங்கி வருகின்ற படிப்புகள் குறித்து மீளாய்வு செய்த திரு பொக்ரியால் மாணவர்களின் உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பதனால் அவர்களுடைய புத்தகங்களைத் தயாரிப்பதற்கு மறுசுழற்சி தாள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்தங்களுடைய பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதற்கு புதிய தாள்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் என்ஐஓஎஸ் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் என்ஐஓஎஸ் நிறுவனத்தின் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்என்ஐஓஎஸ் பொறுப்பாளர்கள் அமைச்சருக்கு தங்களது மாணவர்களுக்காக 4 சேனல்களை நடத்தி வருவதாகவும் அதில் 2 சேனல்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்விக்கானவை என்றும் தெரிவித்தனர்தங்களுடைய மாணவர்களுக்கு வார இறுதி நாட்கள் உட்பட தினசரி 6 மணி நேரம் புதிய பாடங்களை வழங்கி வருவதாகவும் கோவிட்-19 நெருக்கடிக்கு முன்பு 2 மணி நேரம் மட்டுமே இது இருந்ததாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் 14 ஜுன் 2016 அன்று இராணுவக் கல்வி  வீரர்கள் படைப்பிரிவுடன் (AEC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு இருந்ததுஇந்திய இராணுவத்துக்கான என்ஐஓஎஸ் கல்விச் செயல்திட்டம் (NEPIA) என்ற பெயரிலான இந்தக் கூட்டுச் செயல் திட்டமானது இந்திய இராணுவப் படையினரின் கல்வித் தகுதிகளையும் மனிதவள ஆற்றல் ஈவு அளவு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வி அமைச்சர் என்ஐஓஎஸ்-சில் உள்ள காலிப் பணியிடங்களை ஆய்வு செய்த பிறகு நிறுவன அதிகாரிகளுக்கு அனைத்துக் காலியிடங்களையும் விரைவில் நிரப்புமாறு அறிவுறுத்தினார்.

 

 



(Release ID: 1648283) Visitor Counter : 221