சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மத்தியப்பிரதேசத்தில் ரூ 11,000 கோடிக்கு மேல் மதிப்புடைய 45 நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளுக்கு திரு. கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்.

Posted On: 24 AUG 2020 3:19PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு. நிதின் கட்கரி மத்திய பிரதேசத்தில் 45 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டி, திறந்து வைக்கவுள்ளார். இந்த இணைய வழித் திறப்பு விழா செயல்பாட்டிற்கு முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் தலைமை தாங்குவார், இதில் மத்திய அமைச்சர்கள் திரு. தவர்ச்சந்த் கெஹ்லோட் மற்றும் திரு நரேந்திர சிங் தோமர், கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல், திரு ஃபாகன் சிங் குலஸ்தே மற்றும் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு), மாநிலத்திலிருந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மத்திய & மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்

இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கான திட்டப்பணிகளில், 1361 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையை உள்ளடக்கியதாகும். இதன் கட்டுமான மதிப்பு ரூ .11427 கோடி. எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தின் மூலம் மாநிலத்தை சுற்றியுள்ள பகுதிகளுடன் சிறந்த இணைப்பை ஏற்படுத்துவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.

**********



(Release ID: 1648244) Visitor Counter : 166