சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தில் ரூ.9400 கோடி மதிப்பிலான 35 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு திரு. கட்கரி, அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்
प्रविष्टि तिथि:
23 AUG 2020 1:05PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்தியப் பிரதேசத்தில், வரும் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25 –ஆம்தேதி, 35 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். இது தொடர்பான மெய்நிகர் நிகழ்ச்சிக்கு மாநில முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமை வகிப்பார். மத்திய அமைச்சர்கள் திரு. தாவர் சந்த் கெலாட். திரு. நரேந்திர சிங் தோமர், இணையமைச்சர்கள் திரு. பிரகலாத் சிங் பட்டேல், திரு. பக்கான் சிங் குலஸ்தே, ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங், மாநில அமைச்சரகள், பல்வேறு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
அமைச்சர் அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைக்கவும் உள்ள சாலைகள் ரூ. 9,400 கோடி மதிப்பிலான 1139கி.மீ. தூரம் கொண்டவை. இந்தச் சாலைகள் சிறந்த இணைப்புகளை ஏற்படுத்தவும், மக்களின் வசதிக்காகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அமைக்கப்படுகின்றன. இது மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
மக்களின் பயண நேரத்தையும், பொருள்கள் போக்குவரத்து நேரத்தையும் சிறந்த சாலைகள் வெகுவாகக் குறைக்கும். சுமுகமான வாகனப் போக்குவரத்தை ஏற்படுத்துவதுடன், காற்று மாசையும் இவை குறைக்கும். மேலும், மாசு உமிழ்வும் குறையும்.
(रिलीज़ आईडी: 1648078)
आगंतुक पटल : 162