அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

காஸியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையின் 8-வது படைப்பிரிவு மையத்தில் 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்துவைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.

Posted On: 22 AUG 2020 8:20PM by PIB Chennai

காஸியாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8-வது படைப்பிரிவு மையத்தில் நவீன, நீடித்த, மாற்றத்தக்க, விரைவில் கட்டமைக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மற்றும் பல்வேறு கால நிலைகளுக்கு ஏற்ற 10 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையை மத்திய அமைச்சர் (அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை) டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் திறந்துவைத்தார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image003SHEA.jpg

 

 

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்த்தன், “வசதியாக வாழ்வதற்கான சூழலில், பாதுகாப்பு அம்சங்களுடன் ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குவதற்காக தற்காலிக மருத்துவமனை வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கக் கூடியது,” என்றார்.

நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் இருப்பதாகவும், நாள்தோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ளும் திறனை இந்தியா பெற்றிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் மூன்று விதமான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், இவற்றின் பரிசோதனை மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றில் ஒரு மருந்து மூன்றாவது கட்ட சோதனையில் இருப்பதாக அவர் கூறினார். பல்வேறு கட்டப் பரிசோதனைகள் முடிந்த பிறகு, விரைவில் நமது நாட்டுக்குத் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நம்பிக்கை தெரிவித்தார்.



(Release ID: 1648025) Visitor Counter : 158