எரிசக்தி அமைச்சகம்

மின்உற்பத்தி நிறுவனங்களும், மின் பரிமாற்ற நிறுவனங்களும் தாமதமாக செலுத்தப்படும் தொகைகளுக்கு சர்சார்ஜ் ஆண்டொன்றுக்கு 12 சதவீதத்துக்கு மிகாமல் வசூலிக்கலாம் என்று மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

Posted On: 22 AUG 2020 2:12PM by PIB Chennai

மின்சாரத்துறையில்  நிதிநிலைமையில் உள்ள அழுத்தத்தைப் போக்கும் வகையில், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், மின் பரிமாற்ற நிறுவனங்களும் தாமதமாகச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு ஆண்டொன்றுக்கு 12 சதவிகிதத்திற்கு மிகாத வண்ணம் எளிய வட்டி விகிதத்தில் சர்சார்ஜ் வசூலிக்கலாம் என்று மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பி எஃப் சி மற்றும் ஆர் இ சி லிக்விடிடி இன்ஃப்யூஷன் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் அனைத்துக் கட்டணங்களுக்கும் இது பொருந்தும். மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் மீதான நிதிச்சுமை குறைவதற்கு இந்த நடவடிக்கை உதவும்.

 

கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட போதிலும், தாமதமாக செலுத்தப்படும் சர்சார்ஜ் கட்டணங்கள் மீதான வட்டி விகிதம் பொதுவாக அதிகமாக இருந்தது. பல நேரங்களில் ல்பிஎஸ் விகிதம் ஆண்டொன்றுக்கு 18 சதவிகிதம் வரை இருந்தது. இதனால் மின் விநியோக நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கக் காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

மின்துறையில் அனைத்து பங்குதாரர்கள் குறிப்பாக மின் விநியோக நிறுவனங்களின் பணப்புழக்க நிலைமை கோவிட்-19 பொதுமுடக்கக் காலம் மோசமாகப் பாதித்துள்ளது. இந்த நிலைமையைப் போக்குவதற்கு, அரசு, திறன் கட்டணத் தள்ளுபடி; மின் அட்டவணைப் பணிக்கான கடன் உறுதிப் பத்திரங்களுக்கான விதிகளைத் தளர்த்துவது; லிக்விடிடி இன்ஃப்யூஷன் திட்டம் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது இது போன்ற நடவடிக்கைகளில் ஒன்றாக - தாமதமாக செலுத்தப்படும் சர்சார்ஜ் கட்டணங்களைப் பொருத்த விதி - மின் விநியோக நிறுவனங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், பரிமாற்ற உரிமங்களைப் பெறுவதற்கான கட்டணங்களுக்கும், தாமதமாகச் செலுத்தும் கட்டணங்களுக்கும் மட்டுமே இது பொருந்தும். 30.6. 2020 வரை செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதனால் மின்சாரம் தொடர்ந்து கிடைத்து, நுகர்வோர் பயனடைவார்கள். இந்த சிரமமான காலத்திலும் கட்டணங்கள் குறைவாக இருக்கும்.


 



(Release ID: 1647894) Visitor Counter : 157