பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மும்பையில் “டிரைப்ஸ் இந்தியா ஷோரூமை காணொளிக் காட்சி மூலம் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார்.

Posted On: 21 AUG 2020 4:55PM by PIB Chennai

மும்பை கோட்டை எல்ஐசி மேற்கு மண்டல அலுவலக இந்தியன் குளோப் சாம்பர்சில்டிரைப்ஸ் இந்தியா ஷோரூமை” மத்திய பழங்குடியின விகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய  திரு. அர்ஜூன் முண்டா, “50 லட்சம் பழங்குடியினக் கைவினைஞர்கள் மற்றும் வனப்பொருள் சேகரிப்பாளர்களுக்குத் தேவைப்படும் இந்த சமயத்தில், அவர்கள் தங்கள் வருவாயை, வேலைவாய்ப்பை, வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கு அவர்கள் பக்கம் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்’’ என்று கூறினார்.

பழங்குடியினச் சகோதரர்களுக்கு ஆதரவளிக்கும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு TRIFED –இன் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் தமது அமைச்சகத்தின் உறுதிப்பாடு குறித்து பேசிய திரு. முண்டா, இந்தச் சவாலான நேரத்தில் விற்பனையை அதிகரித்து, பழங்குடி வருவாயைப் பெருக்கும் முயற்சியாக, டிரைப்ஸ் இந்தியா ஆன் வீல்ஸ் என்னும் நடமாடும் வாகனங்கள், வன் தன் இயற்கை உற்பத்திப் பொருள்களுடன், எதிர்ப்பு சக்தி ஊக்குவிப்பான்கள் மற்றும் இதர பொருள்களை விற்பனை செய்வது தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 நகரங்களில் நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று இந்த வாகனங்கள் பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும்.

பெருமைமிகு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள டிரைப்ஸ் இந்தியா விற்பனை நிலையம்மும்பையின் மூன்றாவது விற்பனை நிலையமாகும். ஏற்கனவே, பன்வெல், ஜூகு பகுதிகளில் இரண்டு நிலையங்கள் உள்ளன. மும்பை கோட்டை, டிஎன் சாலை, இந்தியன் குளோப் சாம்பர்ஸ் என்னும் முகவரியில்  புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 122-வது டிரைப்ஸ் இந்தியா விற்பனை நிலையமாகும்இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருள்களுடன், அனைத்து 27 மாநிலங்களையும் சேர்ந்த கலை மற்றும் கைவினைப் பொருள்களுடன், இந்தத் தொற்றுக் காலத்திற்கு அவசியமானவன் தன் அத்தியாவசியப் பொருள்கள், நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிப்பான்கள் விற்பனையில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------

 

 

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001N0SD.jpg

 

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image006SGQ5.jpg


 



(Release ID: 1647669) Visitor Counter : 159