திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

கோவிட்-19 தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கான மூன்று காப்புரிமைகளுக்கு, பெர்காம்பூர் தொழிற்பயிற்சி நிலையம் விண்ணப்பித்துள்ளது.

Posted On: 21 AUG 2020 4:12PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு உதவும் வகையில் தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் முயற்சியின் ஓர் அங்கமாக பெர்காம்பூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம் (ITI) கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்காக உருவாக்கியுள்ள தனது மூன்று புதிய கண்டுபிடிப்புப் பொருள்களுக்காகக் காப்புரிமை இதழில் பதிவு செய்துள்ளது.  எந்த ஒரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் ஐடிஐ-யின் உள்ளார்ந்த ஆற்றலுக்கு சான்றாக இந்த கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இது புதிய கண்டுபிடிப்புகள் மீதான நிலையத்தின் முன்னுரிமையை வழங்கும். ஐஐடி மற்றும் என்ஐடி ஆகியவற்றைப் பின்பற்றி பெர்காம்பூரின் ஐடிஐ நாட்டின் காப்புரிமை நிலையக் குழுமத்தில் இணைந்துள்ளது.  வரும் நாட்களில் பெர்காம்பூர் ஐடிஐ-யின் இந்த சாதனையானது புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் மாண்புமிகு பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வையான சுயசார்பு இந்தியா என்பதை நிறைவு செய்வதற்கான பங்களிப்பினை வழங்குவதற்கும் ஏனைய ஐடிஐ-களுக்கு உந்துசக்தியாக இருக்கும். 

ஐடிஐ-யின் இந்த முயற்சியைப் பாராட்டிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு  அமைச்சர் டாக்டர்.மகேந்திரநாத் பாண்டே ”மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்யும் யு.வி.சி ரோபோ வீரரை வடிவமைப்பது அல்லது நடமாடும் உமிர்நீர் மாதிரி சேகரிப்பு கியோஸ்க் மூலம் தீர்வு வழங்குவது என பலவகையிலும் கோவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்கள் முன்னணியில் நிற்கின்றன என்று குறிப்பிட்டார். அத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் சுயசார்புக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதோடு ஆராய்ச்சியின் விளைவுகள் பெரிய அளவில் சமுதாயத்தினரின் தேவைகைளை நிறைவு செய்வதாக இருக்கும்.  மேலும் இது வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான புத்தாக்கத் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கு கூடுதலான ஐடிஐ-களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்.  வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசின் முயற்சிகளோடு ஒருங்கிணைந்து நிற்பதோடு நாட்டில் உள்ள இதர ஐடிஐ-களுக்கு ஒரு முன்மாதிரி உதாரணமாக ஐடிஐ பெர்காம்பூர் உருவாகி இருப்பதற்கு காரணமான அதன் ஆராய்ச்சி குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


(Release ID: 1647662) Visitor Counter : 172