தேர்தல் ஆணையம்
உத்தரப்பிரதேச மாநில மேலவைக்கு இடைத்தேர்தல்
Posted On:
21 AUG 2020 1:34PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேலவையில் உறுப்பினராக இருந்த திரு அமர்சிங் மறைவினால், அங்கு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதற்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிக்கை இம்மாதம் 25-ம் தேதியன்று வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 1, திரும்பப் பெறுவதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 4 என்றும், இடைத்தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்றும் அன்று மாலை ஐந்து மணி அளவில் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
(Release ID: 1647617)
Visitor Counter : 183