சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய அரசின் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் கொல்கத்தா ராஜர்ஹட்டில் உள்ள தனது புதிய வளாகத்தில் புறநோயாளிகள் சேவையைத் தொடங்கியுள்ளது
Posted On:
20 AUG 2020 5:52PM by PIB Chennai
மத்திய அரசின் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் கொல்கத்தா
ராஜர்ஹட்டில் உள்ள தனது புதிய வளாகத்தில் 2020 ஆகஸ்ட் 19ம் தேதி முதல் புறநோயாளிகள் சேவையை தொடங்கியுள்ளது. இந்தப் புறநோயாளிகள் பிரிவு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும். விரைவில், அடிப்படை நோயறி வசதிகளும் அதனைத் தொடர்ந்து பகல்நேர வேதிப்பொருள் சிகிச்சை வசதியும் ஏற்படுத்தப்படும்.
தற்போது இந்த நிறுவனம் கொல்கொத்தா எஸ் பி முகர்ஜி சாலையில் உள்ள அதன் இப்போதைய வளாகத்திலேயே செயல்படும். தேசபந்து சித்தரஞ்சன் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் 1950 முதல் சேவை ஆற்றிவருகிறது. அது நாட்டின் கிழக்குப் பகுதியில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
புற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையிலும் குறைந்த
செலவிலான தரமான புற்றுநோய் சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வரும்
நிலையிலும் புதிய பெரிய வசதியை கொல்கொத்தா ராஜர்ஹட்டில் உள்ள
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது வளாகத்தை
உருவாக்க முடிவு செய்யப்பட்டது. முழுமையாகச் செயல்படும்நிலையில் இந்த இரண்டாவது வளாகம், 460 படுக்கைகள் கொண்ட அதி நவீன வளாகமாக அமைந்து புற்றுநோய் சிகிச்சையின் அனைத்துப் பிரிவுகளிலும் மிக உயர்ந்த தரமுள்ள வசதியை, குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கும்.
*****
(Release ID: 1647581)
Visitor Counter : 250