அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கரிமம் பற்றுகை, பயன்பாடு, சேமிப்பு (சி சி யு எஸ்) துறையில், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை ஊக்குவிப்பு
Posted On:
20 AUG 2020 2:11PM by PIB Chennai
கரிமம் பற்றுகை, பயன்பாடு, சேமிப்பு (Carbon Capture, Utilisation, and Storage - CCUS) துறையில், உலக அளவிலான தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியை, தொழில்நுட்பத்தை மேலும் விரைவுபடுத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
புதுமை இயக்கம் (Mission Innovation - MI) திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள, புதுமைச் சவால்களில் ஒன்று தான் சி சி யு எஸ். இந்த எம் ஐ திட்டம் 24 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இணைந்து உலக அளவிலான தூய்மை எரிசக்திப் புதிய கண்டுபிடிப்புக்காக எடுத்துள்ள முயற்சியாகும். இதில் மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை வினையாற்றும் இணையாகும். சி சி யு எஸ் துறையில் எம்ஐ திட்டத்தின்கீழ், 13 நாடுகளுடன் இணைந்து 19 ஆராய்ச்சி வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை ஏற்கனவே நிதி உதவி அளித்துள்ளது.
தற்போது மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை , சி சி யு எஸ் துறையில், சி சி யு எஸ் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துதல் (CCUS Technologies (ACT) என்பதன் கீழ் ஏ சி டி உறுப்பு நாடுகளுடன் இணைந்து, இந்திய ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற அழைப்பு விடுத்துள்ளது. சி சி யு எஸ் துறையில் சி சி யு எஸ் தொழில்நுட்பத்தை விரைவுபடுத்தும் வகையில், இலக்குகள் கொண்ட புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு திட்ட நிதி உதவி வழங்குவதற்கான முயற்சியாகும் இது. மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1647242
*****
(Release ID: 1647501)
Visitor Counter : 203