எரிசக்தி அமைச்சகம்
என்டிபிசி, குட்கியில் புதிய பாலத்தை கட்டுமானம் செய்து நிலக்கரி விலையைக் குறைத்துள்ளது
Posted On:
19 AUG 2020 8:36PM by PIB Chennai
என்டிபிசி நிறுவனம், கர்நாடகா குட்கியில் உள்ள என்டிபிசி சூப்பர் அனல் மின் நிலையத்தில் ஒரு புதிய பாலத்தை கட்டியுள்ளது. இதனால் நிலக்கரியை எடுத்துச் செல்லும் தூரம் குறைவதால், போக்குவரத்துச் செலவு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.200 – 500 வரை குறைந்துள்ளது. இதனால் மின்சார உற்பத்திச் செலவும் குறைக்கப்பட்டுள்ளது. என்டிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிதாக கட்டப்பட்டுள்ள 670 மீட்டர் நீளமுள்ள பாலத்தால் நிலக்கரி செலவும், மின் உற்பத்திச் செலவும் குறைந்துள்ளன.
----
(Release ID: 1647245)
Visitor Counter : 150