புவி அறிவியல் அமைச்சகம்

அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டின் மத்தியப் பகுதிகளில் தீவிர மழைப் பொழிவு

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2020 7:49PM by PIB Chennai

 அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டின் மத்தியப் பகுதிகளில் பரவலாக, தீவிர மழைப் பொழிவு இருக்கும் என்று புதுதில்லியில் உள்ள இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலைக் கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

     ஒடிசா வடக்குக் கரையோரப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகரக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மையம் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால், ஆகஸ்டு 19-ம் தேதியன்று ஒடிசா மாநிலத்தில் பரவலாக அதிக கனமழை பெய்யக் கூடும். அடுத்த இரண்டு தினங்களுக்கு சத்தீஷ்கர், கிழக்கு மத்தியப்பிரதேசம், மேற்கு மத்தியப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான் குஜராத் மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1647226) வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi