நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

புலம்பெயர்ந்தோருக்கான ஆத்மா நிர்பர் பாரத் திட்டம் - ஒரு முழுமையான கண்ணோட்டம்

Posted On: 18 AUG 2020 8:34PM by PIB Chennai

நாட்டில் விசித்திரமான கொரோனா வைரஸ்தொற்று பரவலால்  நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆத்மா நிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) தொகுப்பின் கீழ் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு 2020 மே மாதத்தின் மத்தியில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து உணவு மற்றும் பொது விநியோக துறை அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு “ஆத்மா நிர்பார் பாரத்  திட்டத்தின்” கீழ் மொத்த அளவாக சுமார் 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்து, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 2020 மே 15 ஆம் தேதி அன்று தகவல் தெரிவித்தது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த / சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு பாதுகாப்புத் தேவைகளை தணிப்பதற்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கோவிட்-19 நோய்தொற்று பரவல் நிலைமையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (என்.எஃப்.எஸ்.ஏ) அல்லது வேறு எந்த ஒரு மாநிலத்தின் பொது விநியோகத்திட்டம் அல்லது எதாவது ஒரு காரணத்திற்காக பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அணுக முடியாத நிலையில் உள்ளவர்கள் குறிப்பாக அதுபோன்ற நபர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை, ஆனால் ஏராளமான முன்னெச்சரிக்கை மற்றும் விரிவான ஊடகக் காட்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் , நாடு முழுவதும் சுமார் 8 கோடி புலம்பெயர்ந்தோர் / சிக்கித் தவிக்கும் புலம்பெயர்வோர் இருப்பதாக தாராளமாக மதிப்பீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு தேவைக்கும் குறையாமல் இருக்க, அனைத்து நிகழ்வுகளுக்கும் போதுமான அளவில் வழங்குவதே இதன் நோக்கம். நாடு முழுவதும் இதுபோன்ற நபர்களின் உண்மையான அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட எண்ணிக்கையின் புள்ளி விவரங்கள் மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுகளுக்கோ கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்துவது அவசியமாகும். உண்மையில், இப்பிரச்சினையின் அளவு, ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதைப்போன்று, அதற்கு அரசிடமிருந்து னிவான, தாராளமான பதில் தேவைப்பட்டது, இதனால் யாரும் விடுபடுவதற்கு வாய்ப்பில்லை.

அதன்படி, நாட்டில் அதிகபட்சமாக புலம்பெயர்ந்தவர்கள் / சிக்கித் தவிக்கும் புலம்பெயர்வோரை உள்ளடக்கும் வகையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தாராளமாக உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. உணவு தானியங்கள் ஒரே சீராக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக கிட்டத்தட்ட 81 கோடி மக்கள்தொகையில் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்) 10 சதவீதம் மொத்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, உணவுத் துறை மாதம் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களையும், மற்றும் 2 மாத காலத்திற்கு அதாவுது, மே மற்றும் ஜூன் 2020  மொத்தமாக  8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களையும் ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த எண்ணிக்கையே உண்மையான நிலவரம் என்றால், சுமார் 8 கோடி புலம்பெயர்ந்த / சிக்கித் தவிக்கும் புலம் பெயர்வோருக்கு இது போதுமானதாக இருக்கும்.

2020 ஆகஸ்ட் 17 வரை கிடைத்துள்ள அறிக்கைகளின் படி, இறக்கி வைக்கப்பட்ட  மொத்தம் 6.38 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களில் மொத்தம் சுமார் 2.49 லட்சம் மெட்ரிக் டன் (39%) உணவு தானியங்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்ட புலம்பெயர்ந்த / சிக்கித் தவிக்கும் புலம் பெயர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் 31 வரை விநியோகம் நீடித்து வரும் நிலையில் புலம் பெயர்ந்தோர் மேலும் பலர் ஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களால் பயனடைவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. குறைந்த பயன்பாடு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை உண்மையில் மிகவும் குறைவா இருந்தது என்பதையும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியிருந்தால் ஏற்கனவே தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அல்லது மாநில குடும்ப ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் இருந்தார்கள் என்பதையும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

 

                                                    ------

 

 



(Release ID: 1646930) Visitor Counter : 515