ஊரக வளர்ச்சி அமைச்சகம்

கிராம மேம்பாடு, வேளாண்மை மற்றும் விவசாய நலன்கள், பழங்குடியினர் விவகாரங்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகங்களின் திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கான சுய உதவிக் குழுத் தளத்தை மேம்படுத்துவதற்கான தொழில் பயிலரங்கு நடைபெற்றது.

Posted On: 18 AUG 2020 5:40PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், இணையக் கருத்தரங்கம் மூலம் பல்வேறு அமைச்சகங்ககளின் திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கான சுய உதவிக்குழு தளத்தை மேம்படுத்த வேண்டுமென்று நாடு முழுவதும் உள்ள மாநில கிராமப்புற வாழ்வாதாரப் பணிகள் குறித்து உரையாற்றினார். இணையக் கருத்தரங்கில் உரையாற்றிய திரு. நரேந்திர சிங் தோமர், 7.14 கோடி கிராமப்புறப் பெண்களை உள்ளடக்கிய 66 லட்சம் சுய உதவிக்குழுக்கள் கொண்ட சுய உதவிக்குழு வலையமைப்பை உருவாக்க (Deendayal Antyodaya Scheme DAY-NRLM) தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் வசதி செய்துள்ளதாகத் தெரிவித்தார். அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அணுகுமுறையின் மூலம் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பயிலரங்கில் உள்ள அனைத்து அமைச்சகங்களிலும், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகளை (FPO) ஆதரிக்கும் திட்டங்களும் இருந்ததை கவனித்த திரு. தோமர், இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்த ஒரு கூட்டு அணுகுமுறையை பின்பற்றலாம் என்று தெரிவித்தார்.

 

கூட்டத்தில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா மற்றும் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பால் ஆகியோர் உரையாற்றினர். கிராமப்புறப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ள புதிய அத்தியாயத்தை திரு. அர்ஜுன் முண்டா பாராட்டினார். பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு திட்டமான பிரதமந்திரியின் வன் தன் திட்டத்தில் (PMVDY)  ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார். கிராம மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகிய இரண்டும் பிரதம மந்திரியின் வன் தன் திட்டத்தில் (PMVDY) பங்காளிகளாக இருக்க முடியும் என்றும் பழங்குடி மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து பொருள்களைச் சந்தைப்படுத்துவது, மதிப்புக் கூட்டல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபடலாம் என்றும் இது பழங்குடி குடும்பங்களின் வருமானத்தைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் உணவு பதப்படுத்துதல் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறை என்று திருமதி ஹர்சிம்ரத் கவுர் பால் கூறினார். வருமானத்தை மேம்படுத்துவதற்கும், முதன்மை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருள்ள் வீணாவதைக் குறைப்பதற்கும், உணவுப் பொருள்களின் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில், மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் “DAY-NRLM கீழ் பண்ணை வாழ்வாதார தலையீடுகள்” (திட்டம், ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு, மாதிரிகள்)  என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

 

புத்தகத்தின் இணைப்பு “DAY-NRLM இன் கீழ் பண்ணை வாழ்வாதாரத் தலையீடுகள் (திட்டம், ஒருங்கிணைப்பு கட்டமைப்பு, மாதிரிகள்)”

 

https://aajeevika.gov.in/sites/default/files/nrlp_repository/Farm%20Livelihoods%20Interventions%20Under%20DAY%20NRLM.pdf  

 

****


(Release ID: 1646756) Visitor Counter : 400