ஜல்சக்தி அமைச்சகம்

மழைப்பொழிவு முன்னறிவிப்பின் படி வெள்ள நிலைமையின் சுருக்கம்

Posted On: 17 AUG 2020 6:20PM by PIB Chennai

மழை முன்னறிவிப்பின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களுக்கான மத்திய நீர் ஆணையத்தால் பின்வரும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன –

 

ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா

 

அடுத்த 24 மணி நேரத்தில் தெலுங்கானா, விதர்பா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமான மற்றும் மிக கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் கோவா

 

கீழ் மஹி, கீழ் நர்மதா, கீழ் பி மற்றும் தமங்கங்கா ஆகிய ஆற்றின் படுகைகளில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த 4-5 நாட்களுக்கு மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் நர்மதா, பி, தமங்கங்கா நதிகளின் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும்.

 

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்

 

அடுத்த 3-4 நாட்களுக்கு கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப்பிரதேசத்தில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், சம்பல், மஹி, சபர்மதி, கலிசிந்த், பனாஸ் (கிழக்கு மற்றும் மேற்கு பாயும்) ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம்

 

அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு இந்த மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், சட்லெஜ், ரவி, பியாஸ், காகர், யமுனா, பாகீரதி, அலக்நந்தா, கங்கா, ராம்கங்கா, சர்தா, சர்ஜு மற்றும் கக்ரா. போன்ற நதிகளில் நீர் மட்டம் உயரவும், வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

 

கர்நாடகா, தமிழ்நாடு

 

ஏற்கனவே பெய்து வரும் மழையின் காரணமாக, தொடர்ச்சியான நீர் வரத்தால் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் உள்ள பெரும்பாலான அணைகள் 90-97 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன. இதனால் கபினி மற்றும் கிருஷ் ராஜ சாகர் நதி வழியாக திறந்துவிடப்படும் நீர் மேட்டூர் அணையில் பாய்கிறது, இது அடுத்த 3-4 நாட்களுக்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது.

 

கிருஷ்ணா நதியின் மேற்கு பகுதிகளிலிருந்து வரும் நீரினால், அல்மட்டி அணை மற்றும் நாராயன்பூர் அணை ஆகியவற்றில் நீர்வரத்து அதிக அளவில் காணப்படுகிறது, மேலும் இந்த அணைகள் 90 முதல் 92 சதவீத அளவு வரை நிரம்பியுள்ளதால், எஞ்சிய நீர் திறந்துவிடப்படுகிறது.

 

பீகார், ஜார்க்கண்ட் மற்றும் கங்கைக்கரையை ஒட்டியுள்ள மேற்கு வங்கம்

 

பீகாரில் உள்ள பல ஆறுகளில் நீர்வரத்து கட்டுக்கடங்காமல் இருப்பதால், வெள்ளப்பெருக்கு அபாய அளவைத் தாண்டிச் செல்கிறது. இதே நிலைமை இன்னும் 3-4 நாட்களுக்குத் தொடரும்.

 

******



(Release ID: 1646611) Visitor Counter : 128