சுற்றுலா அமைச்சகம்

சுதந்திர தினக் கருப்பொருள் சுற்றுலா அமைச்சகத்தின் இணையத் தொடர் ஐக்கிய இந்தியாவின் கட்டிடக் கலைஞர் சர்தார் வல்லபாய் படேல் குறித்த ஒரு அமர்வுடன் முடிவடைகிறது

Posted On: 17 AUG 2020 4:37PM by PIB Chennai

”நமது நாட்டை பாருங்கள்” இணையத் தொடரின் ஒரு பகுதியாக சுற்றுலா அமைச்சகத்தால் நடத்தப்பட்ட சுதந்திர தினக் கருப்பொருள் கருத்தரங்குகள் ஆகஸ்ட் 15, 2020 ஐக்கிய இந்தியாவை கட்டமைத்த சர்தார் வல்லபாய் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கருத்தரங்குடன் பிரமாண்டமாக முடிந்தது.

 

தொடரும் தொற்றுநோயால், இந்த ஆண்டு சுற்றுலா அமைச்சகம் 2020ஆம் ஆண்டு 74 வது சுதந்திர தினம் வரை நாட்டிற்கு வணக்கம் செலுத்த இணைய வழியைத் தேர்வு செய்தது. நாட்டின் மிக முக்கியமான நாளை நினைவு கூறுவதற்கும்,வுரவிப்பதற்கும் சுற்றுலா அமைச்சகம் ஐந்து இணையக் கருத்தரங்குகளை வரிசைப்படுத்தியது. இந்தக் கருத்தரங்குகள் சுதந்திர இயக்கத்தை உள்ளடக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டது. அதில் குறிப்பிடத்தக்க இடங்கள் மற்றும் இந்தியா தனது சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருந்த முன்னோடிகள் ஆகியவை ஆகும்.

 

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001N790.jpg

 

சர்தார் வல்லபாய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட அமர்வு ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் பணிப்பாளர் நாயகம் திருமதி.ரூபீந்தர் பிரார் அவர்களால் துவக்கப்பட்ட போது, பங்கேற்கும் அனைவரும் தேசிய கீதத்தை இசைத்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபடுவதற்காக, பல தனிநபர்கள் செய்த தியாகங்களையும், சுதந்திர தின இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் போன்றவற்றையும் இணையத்திரை வழியாக சுற்றுலா அமைச்சகம் எவ்வாறு நினைவு கூர்கிறது என்பதை அவர் விவரித்தார்.

 

சுதந்திரமான நமது தைரியமான தலைவர்களைப் போலவே, இப்பொழுதும் என்றென்றும் ஒற்றுமையின் சக்தியில் பெரும் பலத்தைக் கண்டுபிடிப்போம் என்ற செய்தியுடன் இணையக் கருத்தரங்கம் நிறைவடைந்தது..

 

இந்த இணையக் கருத்தரங்க அமர்வுகள் இப்போது பின்வரும் வலைதளத்தில் காணக் கிடைக்கின்றன. https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

ஹைதராபாத் என்ற தலைப்பில் அடுத்த கருத்தரங்கு 2020 ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 11.00 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1646607) Visitor Counter : 192