ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீரில் 1858 சாலைகள் 11,517 கி.மீ மற்றும் 84 பாலங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன

Posted On: 17 AUG 2020 5:14PM by PIB Chennai

பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைk கணக்கெடுப்பின் அடிப்படையில் இணைக்கப்படாத வாழ்விடங்களுக்கான இணைப்பை வழங்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் முதன்மைth திட்டமாகும். ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றின் யூனியன் பிரதேசங்களில், 250க்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள இணைக்கப்படாத அனைத்து வாழ்விடங்களும் இந்தth திட்டத்தின் கீழ் தகுதியுடையவை. ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில், 19,277 கி.மீ நீளமுள்ள 3,261 சாலைகள் மற்றும் 243 பாலங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1858 சாலைகள் 11,517 கி.மீ மற்றும் 84 பாலங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளன. இதே போல், லடாக் யூனியன் பிரதேசத்தில், 1207 கி.மீ நீளமுள்ள 142 சாலைகள் மற்றும் 3 பாலங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 699 கி.மீ நீளமுள்ள 96 சாலைகளும், 2 பாலங்களும் ஜூலை 2020 வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் தகுதியான, 2,149 இணைக்கப்படாத வாழ்விடங்களை இணைப்பதற்கான பணிகள் அனுமதிக்கப்பட்டன, அவற்றில் 1,858 வாழ்விடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசத்தில், தகுதிவாய்ந்த 65 வாழ்விடங்களுக்கான பணிகள் அனுமதிக்கப்பட்டன. அவற்றுள் 64 வாழ்விடங்கள் ஏற்கனவே ஜூலை 2020க்குள் இணைக்கப்பட்டுள்ளன.

 

அதிகளவில் சாலைப்பணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தும், வனத்துறையிடமிருந்து அனுமதி கிடைக்காததால், அனுமதிக்கப்பட்ட சாலை பணிகளை ஆகஸ்ட் 2019க்குள் தொடங்க முடியவில்லை. எவ்வாறாயினும், நிலுவையில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகள் கணிசமான எண்ணிக்கைகளில் தீர்க்கப்பட்டுள்ளன, மேலும் கடந்த ஒரு வருடத்தில் அரசின் ஆளுமை முறைமையில் ஏற்பட்ட மாற்றங்களின் உதவியுடன் பணிகள் வழங்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டில், 1,292 கி.மீ நீளமுள்ள 181 சாலைப்பணிகள் மற்றும் 11 பாலங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளன, இதன் செலவு ரூ .715 கோடிக்கு மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 

பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (PMGSY) கீழ் சாலைப் பணிகளை மேம்படுத்துவதற்கு பின்வரும் இரண்டு பணிகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

 

இணைப்பு சாலையை T03 இலிருந்து STOK மேம்படுத்துதல் (PMGSY Leh)

நீளம்: 11.70 கி.மீ, அனுமதிக்கப்பட்ட செலவு: ரூ. 1299.78 லட்சம்.

 

சப்ளை மோர் T03 இலிருந்து கைந்த்காலி (PMGSY ஜம்மு) வரை சாலையை மேம்படுத்துதல்

நீளம்: 27.70 கி.மீ., அனுமதிக்கப்பட்ட செலவு: ரூ. 2389.32 லட்சம்

********



(Release ID: 1646602) Visitor Counter : 178