பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
ஐ.எல் & எஃப்.எஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டுக்கான 2017-18 நிதி ஆண்டின் சட்டப்பூர்வத் தணிக்கையின் தணிக்கைத் தரம் வாய்ந்த மறுஆய்வு அறிக்கையை என்.எஃப்.ஆர்.ஏ வெளியிட்டது
Posted On:
17 AUG 2020 2:50PM by PIB Chennai
உள்கட்டமைப்புகளைக் குத்தகைக்கு விடுதல் மற்றும் நிதி சேவை லிமிடெட் (Infrastructure Leasing & Financial Services Limited - IL&FS) அமைப்பிற்கான 2017-18 நிதி ஆண்டின் சட்டப்பூர்வ தணிக்கையின் தணிக்கைத் தரம் பற்றிய மறுஆய்வு அறிக்கையை தேசிய நிதிசார் அறிக்கை ஆணையம் (National Financial Reporting Authority - NFRA) வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான சட்டப்பூர்வ ஆடிட்டராக பி.எஸ்.ஆர் & அசோசியேட்ஸ் எல்எல்பீ (பி.எஸ்.ஆர்) அமைப்பு செயல்பட்டு இருந்தது.
கம்பெனிகள் சட்டம் 2013ன் பிரிவு 132(2)(பி) மற்றும் என்.எஃப்.ஆர்.ஏ விதிகள் 2018க்கு இணங்க இந்த தணிக்கைத் தரம் வாய்ந்த மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு என்.எஃப்.ஆர்.ஏ ஆணையமானது துறைகளுக்கு இடையில் கணக்குப்பதிவின் தரநிலைகள் மற்றும் கணக்குத்தணிக்கைத் தரநிலைகளைக் கண்காணிக்கவும், அவற்றுக்கு இணங்க செயல்படுவதை நடைமுறைப்படுத்தவும் வழிவகை செய்துள்ளது.
என்.எஃப்.ஆர்.ஏ இந்த ஏ.கியூ.ஆர்.ஆர்-ல் பி.எஸ்.ஆர் அமைப்பை ஐ.எஃப்.ஐ.என் நிறுவனத்துக்கான சட்டப்பூர்வ ஆடிட்டர்களாக நியமித்தது தொடக்கத்தில் இருந்தே சட்டத்திற்கு புறம்பானதாகவும் செல்லாததாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. தணிக்கைக்கான தரநிலைகளின் தேவைகளை பி.எஸ்.ஆர் அமைப்பு நிறைவேற்றத் தவறிய தருணங்கள் முக்கியமானவை மற்றும் பி.எஸ்.ஆர் அமைப்பானது தணிக்கைத் தரநிலைகளைக் கடைபிடித்து தணிக்கைச் செய்யப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதற்கு போதுமான நியாயமான காரணங்கள் இல்லை. மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அடிப்படையான தவறான கணக்கு விவரங்கள் நிதிப்பொறுப்புடைமையை நிர்வாகம் பூர்த்தி செய்துவிடும் என்று தானாகவே கருதிக்கொள்ளுதல், நிதி அறிக்கையைத் தயாரிப்பதற்குப் பொறுப்பானவர்களோடு தேவையான தொடர்பியலை மேற்கொள்ளாமல் இருத்தல், பொருத்தமில்லாத காரணிகளின் அடிப்படையில் நிதிசார் தகவலை பொருண்மையாகக் கருதி நிர்ணயித்தல் முதலானவற்றில் இந்த நிறுவனம் தோல்வி அடைந்துள்ளது. மேலும் என்.எஃப்.ஆர்.ஏ ஆணையமானது பி.எஸ்.ஆர் பயன்படுத்திய ஐடி செயல்முறைகள் / பிளாட்ஃபார்மில் குறைகள் இருப்பதாக அதிலும் அமைப்பு மற்றும் கட்டமைப்பு சார்ந்த குறைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
இதைத் தவிர்த்து தனிப்பட தணிக்கைத் தரம் வாய்ந்த மறுஆய்வு அறிக்கை தொடர்பாக கம்பெனிகள் சட்டம் 2013இன் பிரிவு 132(4) என்பதன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என என்.எஃப்.ஆர்.ஏ ஆணையமானது பரிசீலித்து வருகிறது.
தணிக்கைத் தரம் பற்றிய மறுஆய்வு அறிக்கையை (Audit Quality Review Report) அறிக்கையை https://nfra.gov.in/ என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்.
****
(Release ID: 1646458)
Visitor Counter : 247