வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
‘அடுத்த எல்லைப்புறம்: இந்தியாவின் பொலிவுறு நகரங்கள்’_ இந்தியாவின் பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் பயணங்கள் குறித்து வரவிருக்கும் ஆவணப்படம்.
Posted On:
14 AUG 2020 5:21PM by PIB Chennai
கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறத்துக்கு நிமிடத்துக்கு 25 முதல் 30 பேர் இடம்பெயரும் நிலையில், 2050-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் 70 சதவீத மக்கள் நகரங்களில் வசிப்பார்கள் என்று உலகப் பொருளாதார அமைப்பு கணித்துள்ளது. இன்று, நாடு மாற்றத்தின் முனையில் அமர்ந்துள்ளது. முக்கியமாக, நவீன வாழ்க்கைத்தேவை, தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகியவற்றுக்காக நகர்ப்புற இடப்பெயர்வு நடைபெறுகிறது. இந்திய நகரங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன், தேசிய முன்முயற்சியில் நேசனல் ஜாக்ரபிக், ‘அடுத்த எல்லைப்புறம்: இந்தியாவின் பொலிவுறு நகரங்கள்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை அறிவித்துள்ளது. நான்கு கலங்கரை விளக்க பொலிவுறு நகரங்கள் பற்றிய விஷயங்களைப் படம் பிடித்து காட்டுகிறது. வலுவான நாட்டைக் கட்டமைக்க புதுமை அவசியம் என்பதை இது வலியுறுத்துகிறது.
சுதந்திரத் திருநாளான ஆகஸ்ட் 15 2020 அன்று மாலை 6 மணிக்கு நேசனல் ஜாக்ரபிக் சேனலில் பிரிமியர் காட்சி நடைபெறுகிறது. சாதாரண மனிதன் வாழ்க்கையில், பொலிவுறு நகரங்கள் இயக்கம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இப்படம் காட்டுகிறது. நாடு முழுமையும் பெருமிதம் கொள்ளுமளவுக்கு இது அமையும். 44 நிமிடம் ஓடும் இந்தப்படம், சூரத், விசாகபட்டினம், புனே, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களை மையப்படுத்தியதாகும். இந்த நகரங்கள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில்நுட்பம், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, தொன்மையான பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் என பல்வேறு வடிவங்களில் சிறப்பு வாய்ந்தவையாக திகழ்கின்றன. இந்த நான்கு அற்புதமான நகரங்களும், சிறந்த முறையில் சிந்தித்து, இந்தியாவின் முன்னேற்றத்துக்கான சவால்களைச் சந்தித்தவை என்று தனித்துவமான உள்ளீட்டை இந்தப் படம் பிரதிபலிக்கிறது.
“நேசனல் ஜாக்ரபிக் சேனலின் இந்தப் படம், இந்தியாவின் பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் ஆழமான புரிந்துணர்வை உலகத்துக்கு காட்டும் என நாம் நம்புகிறோம். வேகமான நகரமயமாக்கத்தில் இந்தியா அமர்ந்துள்ளது. இந்தியாவின் நகர்ப்புற பயணத்தின் மாற்றம் ஏற்படுத்தும் சிந்தனைகள், புதிய எண்ணங்களுக்கு கட்டியம் கூறும் வகையில் பொலிவுறு நகரங்கள் உள்ளன. அவற்றின் பணிகளை இந்தப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’’ என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்தப் படம் பற்றி கூறிய, இன்போடைன்மென்ட், ஆங்கிலம், குழந்தைகள் ஸ்டார் இந்தியா தலைவர் அனுராதா அகர்வால், “வரவிருக்கும் எங்களது ‘அடுத்த எல்லைப்புறம்; இந்தியாவின் பொலிவுறு நகரங்கள்’ படத்தில், நான்கு நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான தேசிய முன்முயற்சியை நாங்கள் காட்டியுள்ளோம். மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக இருந்த போதிலும், இந்தியா வளர்ச்சியின் முன்னுதாரண மையமாக விளங்குகிறது. புதுமையும், தொழில்நுட்பமும் எவ்வாறு நமது நாட்டின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைகிறது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த நகரங்கள் வருங்காலத்துக்கு தேவையானவற்றை உருவாக்குவதில் முக்கிய கருவியாக அமையும்” என்று கூறினார்.
நேசனல் ஜாக்ரபிக் சேனலின் இந்தப் படமான ‘அடுத்த எல்லைப்புறம்: இந்தியாவின் பொலிவுறு நகரங்கள்’ ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்.
***
(Release ID: 1645925)
Visitor Counter : 200