இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இறகுப் பந்து விளையாட்டு வீரர் திரு என் சிக்கி ரெட்டி, பிசியோதெரபிஸ்ட் திரு சி கிரண் ஆகியோருக்கு கொவிட் தொற்று
प्रविष्टि तिथि:
13 AUG 2020 9:08PM by PIB Chennai
ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமிக்கு வந்த இறகுப் பந்து விளையாட்டு வீரர் திரு என் சிக்கி ரெட்டி, பிஸியோதெரப்பிஸ்ட் திரு சி கிரண் ஆகியோருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இதன் காரணமாக, சுத்திகரிப்புப் பணிக்காக இந்த அகாடமி மூடப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
-------
(रिलीज़ आईडी: 1645728)
आगंतुक पटल : 193