பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தை (NIIO) பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
13 AUG 2020 6:30PM by PIB Chennai
கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தை (NIIO) பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இணையக் கருத்தரங்கு ஒன்றின் மூலம் தொடங்கி வைத்தார். உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தற்சார்பு இந்தியாவின் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறையில் புதுமைகளைப் புகுத்தவும், சுயசார்பை உறுதி செய்ய சுதேசிமயமாக்கலைப் பரவலாக்கவும் கல்வித்துறை மற்றும் தொழில்துறையுடன் இறுதிப் பயனர்கள் தொடர்பு கொள்ள பிரத்யேக அமைப்புகளை NIIO உருவாக்குகிறது.
NIIO ஒரு மூன்று அடுக்கு நிறுவனமாகும். கடற்படைத் தொழில்நுட்ப வளர்ச்சிக் குழு (N-TAC) புதுமைகள் மற்றும் சுதேசிமயமாக்கல் ஆகிய இரண்டு அம்சங்களை ஒன்றாக இணைத்து மேல்மட்ட அளவிலான அறிவுரைகளை வழங்கும். N-TAC-க்கு கீழ் இயங்கும் பணிக்குழு ஒன்று திட்டங்களை நிறைவேற்றும். வளர்ந்து வரும் புதுமையான தொழில்நுட்பங்களை விரைவான காலக்கெடுக்குள் நிறுவ தொழில்நுட்ப மேம்பாட்டு வளர்ச்சிக் குழு (TDAC) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருக்கும் வளங்களைக் கொண்டு கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தை ராணுவத் தலைமையகங்கள் நிறுவ வரைவுப் பாதுகாப்புக் கொள்முதல் கொள்கை 2020 (DAP 20) எண்ணுகிறது. சுதேசிமயமாக்கல் இயக்குநரகம் ஒன்று இந்தியக் கடற்படையில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. செயல்பாட்டில் உள்ள சுதேசிமயமாக்கல் நடவடிக்கைகள் மீது புதிய அமைப்புகள் கட்டமைக்கப்பட்டு, புதிய கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தும்.
***
(Release ID: 1645685)
Visitor Counter : 271