பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள “பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற ஆன்லைன் செயல்திறன் தகவல் பலகை அறிமுகம்

Posted On: 13 AUG 2020 1:03PM by PIB Chennai

மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம் என்ற ஆன்லைன் செயல்திறன் தகவல் பலகை ஒன்றை நிதிஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு.அமிதாப் காந்த், நிதிஆயோக் உறுப்பினர் திரு.ரமேஷ் சந்த் ஆகியோர் 10 ஆகஸ்ட் 2020 அன்று துவக்கி வைத்தனர். மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகம் தேசிய வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, வளர்ச்சிக்கான நீடித்த இலக்குகளின் (Sustainable Development Goals -DGs) புதிய இந்தியாவின் உத்திகள் மற்றும் இதர தொழில் முயற்சிகளின் கீழ் சி எஸ் எஸ்/ சி எஸ் திட்டங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கான நிதிஆயோக் நடத்திய கூட்டத்தில், இந்தத் தகவல் பலகை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்த வளர்ச்சிக்கான 2030 திட்டம் உலகை மாற்றியமைக்கும் புரட்சியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 2015 இல் இந்த எஸ் டி ஜி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.

 

நாட்டில் 17 எஸ் டி ஜி இலக்குகளை செயல்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசால் நிதிஆயோக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது திரு.தீபக் கண்டேகர் தலைமையிலான மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சர் குழு, அமைச்சகத்தால் கடந்த ஓராண்டு காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு இணைய வழி முயற்சிகளைக் குறித்து நிதி ஆயோக் அலுவலர்களிடம் விளக்கிக் கூறியது

 

பல்வேறு திட்டங்களை டிஜிட்டல் மயமாக்கிதற்காக திரு.அமிதாப் அமைச்சகத்துக்கு பாராட்டு தெரிவித்தார். பழங்குடியினருக்கு அதிகாரம் இந்தியாவை மாற்றி அமைத்தல் என்ற செயல்திறன் தகவல் பலகை ஒருங்கிணைப்பு குறித்தும், அமைச்சகத்துக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். நிதி ஆயோக் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட வெளிப்பாட்டு இலக்குகளை (Output-Outcome goals) அடைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு நிதிஆயோக் உறுப்பினர் திரு. ரமேஷ் சந்த் அமைச்சகத்திற்குப் பாராட்டு தெரிவித்தார்

 

எஸ் டி ஜி இலக்குகளை அடைவது பற்றி 11 திட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். ஐந்து ஸ்காலர்ஷிப் திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும். இந்த ஸ்காலர்ஷிப் திட்டங்களின் கீழ் ஷெட்யூல்ட் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பயனாளிகள், ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 2500 கோடி ஸ்காலர்ஷிப் பெறுகிறார்கள்.

 

ஷெட்யூல்ட் பழங்குடியின மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள டிஜிட்டல் இந்தியா முயற்சிகளின் கீழ் இந்தத் தகவல் பலகை இடம்பெற்றுள்ளது இதனால் அனைத்துத் திட்டங்களும் வெளிப்படையாகவும் மேலும் திறனுள்ள வகையிலும் செயல்படுவதை உறுதி செய்ய முடியும். இணையவழி மூலம் தலைவர்கள் ஆகுதல் என்ற திட்டத்தை அமைச்சகமும் முகநூலும் இணைந்து மேற்கொண்டுள்ளன. சிக்கிள் செல் ஆதரவு முனையம் ஒன்றும் உள்ளது இந்த தகவல் பலகையை சீஇடி - சென்டர் ஆஃ எக்சல்லேன்ஸ் ஆஃ டேட்டா அனாலிசிஸ் அமைப்பும், தேசிய தகவல் மையமும் (என் ஐசி)  இணைந்து உருவாக்கியுள்ளனர். இணைப்பு (http://dashboard.tribal.gov.in).

*****



(Release ID: 1645504) Visitor Counter : 201