அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் சுட்டிக்காட்டினார்

Posted On: 11 AUG 2020 2:30PM by PIB Chennai

கோவிட் – 19 நோய் தொற்று காரணமாக நிகழ்ந்த டிஜிட்டல் மாற்றங்கள் குறித்த இணையக் கருத்தரங்கில் பேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளரும் பேராசிரியருமான, அசுதோஷ் சர்மா, எதிர்காலம் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதாகும் என்றும், கோவிட்-19 வைரஸ் அதை எதிர்ப்பதைக் காட்டிலும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க நாட்டுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

"டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது நாட்டைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதுடன், நமது" சுயசார்பு பாரதம்" என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றவும் துணை செய்யும்" என்பதை பேராசிரியர் சர்மா சுட்டிக்காட்டினார். பொது நிறுவனங்களின் நிலையான மாநாடு (SCOPE) ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில், தரவு என்பது புதிய மந்திரம் என்றும், அதன் மதிப்பை உணர்ந்து நமது முன்னேற்றத்திற்கு அந்தத் தரவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கோவிட் -19 க்கு முன்பே பிரகாசமான எதிர்காலம் மிக விரைவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் வைரஸ் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்பதை பேராசிரியர் சர்மா விளக்கினார். இது கற்பனைக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு துறையையும் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சீர்குலைத்துள்ளது. அதன் ’தாக்கம் எல்லா அம்சங்களிலும் உள்ளது - அது உழைப்புக்கு மனித சக்தி கிடைப்பதில் இருந்து, விநியோகச் சங்கிலிகள் அல்லது திட்டத்தை செயல்படுத்துதலில் இருக்கும் சிக்கல்கள் வரை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், சாதனைகளைச் சீர்குலைக்க எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், அவற்றால் நாம் சாதிப்பதைப் பெரிதாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது., மேலும் நாம் எங்கிருக்கிறோம், எங்கு இருக்க விரும்புகிறோம் என்று சிந்திக்க இது ஒரு நல்ல நேரம்.

டிஜிட்டல், சைபர் டிஜிட்டல் பகுதிகளில் பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தினார்.

 

*****



(Release ID: 1645070) Visitor Counter : 168