குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும்: திரு. நிதின் கட்கரி.

Posted On: 10 AUG 2020 3:24PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் (MSME) வரையறை, நிதித் திட்டத்தின் திட்டங்கள், சாம்பியன்ஸ் போர்டல், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட வரவுகளை மாற்றுவது ஆகியன ஊரடங்கின் காரணமாக மந்தமான பொருளாதார சுழற்சியை நிச்சயமாக மீட்டெடுக்கும் என்று குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார். இன்று கர்நாடக மாநில கவுன்சில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் கூட்டமைப்பு.(Federation of Indian Chambers of Commerce and Industry Karnataka State Council – FISSI) ஏற்பாடு செய்த குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான (MSME) உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய போது இதை தெரிவித்தார்.  அனைத்து தரப்பினரிடமிருந்தும், அனைத்து வகையான அச்சத்தையும், எதிர்மறை சிந்தனைகளையும் நீக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் நாட்டை ஒரு உன்னதப் பொருளாதார சக்தியுள்ள நாடாக மாற்ற அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.

திரு.கட்கரி மேலும் கூறுகையில், அறிவிக்கப்பட்ட ரூ 3 லட்சம் கோடி நிவாரணத் தொகையில், 1,20,000 கோடி ரூபாய் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு (MSME) வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தாமதமாகப் பணம் செலுத்துவதில் இருக்கும் சிக்கல் குறித்து விவாதித்த அவர், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கும் நிலுவையில் உள்ள பில்களை 45 நாட்களுக்குள் அளிக்க அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். அனைத்து முதலமைச்சர்களும் தங்கள் மாநில / யூனியன் பிரதேச அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான (MSME) நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை வெளியிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சமதன் இணைய தளத்தில் அளிக்கப்பட்ட புகார்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர், இணையக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடம், ஒரு நிலவங்கி மற்றும் சமூக சிறு நிதிநிறுவனம் என்ற யோசனையை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், இது தொழில்முனைவோர் மற்றும் சிறு கடைகள் மற்றும் வணிகங்களை நடத்த விரும்பும் நபர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

பிரதம மந்திரியின் தொலைநோக்குத் திட்டமான “சுயசார்பு பாரத் இயக்கம்” பற்றி விவாதித்த போது, ​​குறிப்பாக 115 சிறப்பு மாவட்டங்களில் கைத்தறி, கைவினைப்பொருள்கள், காதித் தொழில்கள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார். வேளாண், கிராமப்புற மற்றும் பழங்குடியினர் துறையினருக்கான சிறப்புக் கொள்கைகளை நாம் திட்டமிட வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் உள்ளது எனவும் தெரிவித்தார்.

கர்நாடக அரசைச் சேர்ந்த அமைச்சர் திரு. ஜகதீஷ் ஷெட்டார், இந்திய மாநில வங்கியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநிலக் கவுன்சில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry Karnataka State Council – FISSI) / பிரதிநிதிகள் ஆகியோர் இந்த இணையக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

                                          *****   (Release ID: 1644902) Visitor Counter : 21