விவசாயத்துறை அமைச்சகம்

2020 ஏப்ரல் 11 முதல் ஆகஸ்ட் 8 வரை 10 மாநிலங்களின் 5.22 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Posted On: 10 AUG 2020 4:42PM by PIB Chennai

2020 ஏப்ரல் 11 தொடங்கி  ஆகஸ்ட் 8 வரை, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் , பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில், 2,58,406  ஹெக்டேர் பரப்பில், வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்களால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 9, 2020 வரை, ராஜஸ்தான் , மத்தியப் பிரதேசம், குஜராத் , பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அரியானா, உத்தரகாண்ட், பீகார் ஆகிய  மாநிலங்களில், 2,64, 491   ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில், ராஜஸ்தானின் பார்மர்,ஜோத்பூர், பிக்கானிர், நாகவுர், சுரு, அனுமான்கர், ஶ்ரீ கங்காநகர் ஆகிய 7 மாவட்டங்களில் , 46 இடங்களிலும்குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் ஒரு இடத்திலும் வெட்டுக்கிளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்சிஓ-க்களால் எடுக்கப்பட்டன.

ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில், தற்போது, 104 கட்டுப்பாட்டுக் குழுக்கள் , தெளிப்பு வாகனங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 200-க்கும் அதிகமான  மத்திய அரசுப் பணியாளர்களும் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ராஜஸ்தானின், பார்மர், ஜெய்சால்மர், பிக்கானிர், நாகவுர், பாலோடி ஆகியவற்றில் , உயர்ந்த மரங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் வகையில், பூச்சிக் கொல்லிகளைத் தெளித்துசிறப்பான செயல்பாட்டுக்காக, 15 ட்ரோன்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப ராஜஸ்தானின், பாலைவனப் பகுதிகளில் மணி ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படுகிறதுஎம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் மூலம் வெட்டுக்கிளி அழிப்பு நடவடிக்கையில் இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளது.

 மத்தியப்பிரதேசம், குஜராத் , உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில், குறிப்பிடத்தக்க அளவுக்கு பயிர் இழப்பு இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், ராஜஸ்தானின் சில மாவட்டங்களில் சிறு அளவுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

நேற்று (9.08.2020) , ராஜஸ்தானின் பார்மர்,ஜோத்பூர், பிக்கானிர், நாகவுர், சுரு, அனுமான்கர், ஶ்ரீ கங்காநகர்  ஆகிய இடங்களிலும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திலும், வெட்டுக்கிளிகள் பரவலாக இருந்தது தெரிய வந்தது.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2020 ஆகஸ்ட் 7 ,வெட்டுக்கிளி நிலவரப்படிஆப்பிரிக்காவின் ஹார்ன், ஏமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக இருப்பதும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் இருபக்கத்திலும் கோடை இனப்பெருக்கம் நடைபெற்று வருவதும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தென் மேற்கு  ஆசிய நாடுகளின் ( ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், பாகிஸ்தான்) பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த வாராந்திர மெய்நிகர் கூட்டத்திற்கு எப்ஏஓ ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை , இந்த ரநாடுகளின் தொழில்நுட்ப அதிகாரிகளின் 20 மெய்நிகர் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

------------------------------------------------------------

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0011Q5B.jpg(Release ID: 1644901) Visitor Counter : 13